Sunday, May 5, 2024
Home » IPL 2024 SRH vs RCB: சன்ரைசர்ஸ் அணியின் விஸ்பரூபத்துக்கு விடை கொடுக்குமா RCB?

IPL 2024 SRH vs RCB: சன்ரைசர்ஸ் அணியின் விஸ்பரூபத்துக்கு விடை கொடுக்குமா RCB?

by Prashahini
April 25, 2024 4:27 pm 0 comment

IPL 2024 இன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையிலான 41ஆவது ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று (25) இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது

இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் இரு அணிகளும் IPL புள்ளி அட்டவணையில் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளும். RCB இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. RCB (Royal Challengers Bengaluru) தொடர்ந்து 7 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கடைசி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய போட்டியில் சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தின் ஆடுகளம் (SRH vs RCB பிட்ச் ரிப்போர்ட்) பொதுவாக துடுப்பாட்டத்திற்கு சாதகமாக கருதப்படுகிறது. இந்த மைதானத்தில் பவுண்டரிகள், சிக்சர்கள் மழை பொழியலாம். பிட்ச் சிறியதாக இருப்பதே இதற்குக் காரணம். இந்த சீசனில் ஹைதராபாத் அணி இந்த மைதானத்தில் 277 ஓட்டங்கள் குவித்துள்ளது. இதனால் இன்றைய போட்டியிலும் அதிக ஓட்டங்கள் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் உள்ள இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 73 IPL போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணி 32 ஆட்டங்களிலும், பின்னர் துடுப்பெடுத்தாடும் அணி 41 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் ஒரு சுவாரசியமான புள்ளி விவரம் என்னவென்றால், நாணயச்சுழற்சியில் தோற்ற அணி தான் அதிக போட்டிகளில் வென்றுள்ளது. இந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில், டாஸ் இழந்த அணி 47 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், வென்ற அந்த அணி 26 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இங்கு அதிகபட்ச ஸ்கோர் 277. நடப்பு IPL போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடித்தது. குறைந்த ஓட்டங்கள் 80 டெல்லி கேபிடல்ஸ் அடித்த ஓட்டங்கள் ஆகும்.

புள்ளி பட்டியலில் இரு அணிகளின் நிலை என்ன?

புள்ளிகள் பட்டியலில் ஹைதராபாத் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. ஆர்சிபிக்கு இந்த சீசன் சிறப்பாக அமையவில்லை. அந்த அணி தொடர்ந்து போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறது. ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 1இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, 7இல் தோல்வியை சந்தித்துள்ளது. RCBஅணி 2 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில், அதாவது பத்தாவது இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி, ஷாபாஸ் அகமது, அப்துல் சமத், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கர்ண் ஷர்மா, முகமது சிராஜ், லாக்கி பெர்குசன், யாஷ் தயாள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT