Thursday, May 9, 2024
Home » 2023 ஜூன் பரீட்சைத் தொடருக்கான பெறுபேறுகளை வெளியிட்டுள்ள கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல்

2023 ஜூன் பரீட்சைத் தொடருக்கான பெறுபேறுகளை வெளியிட்டுள்ள கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல்

by Rizwan Segu Mohideen
August 21, 2023 4:02 pm 0 comment

– இலங்கையில் உள்ள மாணவர்கள் கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் AS மற்றும் உயர் தரம், IGCSE, சாதாரண தரத்திற்கான பரீட்சை பெறுபேறுகளை பெற்றுள்ளனர் 

கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல், 2023 ஜூன் பரீட்சைத் தொடரின் பெறுபேறுகளை கடந்த வாரத்தில் இலங்கையிலுள்ள மாணவர்கள் பெற்றுள்ளனர். கேம்பிரிட்ஜ் IGCSE மற்றும் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் 16 ஆம் திகதியும், கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் AS மற்றும் உயர் தர பெறுபேறுகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதியும் வெளியிடப்பட்டன. இந்த பெறுபேறுகள் அவர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டத்தின் முடிவைக் குறித்து நிற்பதுடன், தொழில் புரிந்தாலும் அல்லது படிப்பைத் தொடர்ந்தாலும், இது உலகில் அவர்களின் அடுத்த கட்டத்திற்கு அவர்களைத் தயார்படுத்துகின்றன.

ஒரு இலாப நோக்கற்ற ஸ்தாபனமான கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல், உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாகும். அத்துடன் 3 முதல் 19 வயதுடையவர்களுக்கான சர்வதேச கற்கை நெறிகள் மற்றும் தகமைகளின் உலகின் மிகப்பெரிய சேவை வழங்குநராகும். அதன் 2023 ஜூன் பரீட்சைத் தொடரின் பெறுபேறுகளை உலகம் முழுவதும் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வெளியிட்டுள்ளது. 

இந்த ஆண்டு கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் இன் மிகப் பெரிய பரீட்சைத் தொடராக அமையப்பெற்றுள்ளதுடன், 147 நாடுகளில் உள்ள 5,600 பாடசாலைகளில் கேம்பிரிட்ஜ் பரீட்சைகளுக்கு 1.7 மில்லியன் மாணவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. 2022 ஜூன் பரீட்சைக்குத் தோற்றியவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 11% அதிகரிப்பாகும்.

கடந்த சில வருடங்களாக தொற்றுநோய்களின் சவால்களுக்கு மத்தியிலும், இலங்கையில் உள்ள மாணவர்கள் தமது அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்குத் தேவையான தகைமைகளைப் பெற முடிந்துள்ளதுடன், இது அவர்களின் கடின உழைப்பிற்கும் அவர்களின் பாடசாலைகள், ஆசிரியர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் சான்றாகும். 

ஆங்கில மொழி, கணிதம் மற்றும் கணினி விஞ்ஞானம் ஆகியன இலங்கையில் மிகவும் பிரபலமான கேம்பிரிட்ஜ் IGCSE / சாதாரண தர பாடங்களாக இருந்ததுடன், பௌதிகவியல், இரசாயனவியல் மற்றும் கணிதம் ஆகியன மிகவும் பிரபலமான கேம்பிரிட்ஜ் சர்வதேச AS மற்றும் உயர் தர பாடங்களாக இருந்தன.

2023 ஜூன் பரீட்சைத் தொடர் தொடர்பில், கேம்பிரிட்ஜில் உள்ள சர்வதேச கல்விக்கான குழும முகாமைத்துவப் பணிப்பாளரான ரொட் ஸ்மித் அவர்கள் கருத்து வெளியிடுகையில்: “இந்த பெறுபேறுகளை ஈட்டுவதில் கேம்பிரிட்ஜ் மாணவர்களின் கடின உழைப்புக்காக நான் அவர்களை வாழ்த்துகிறேன். கடந்த சில வருடங்களாக அவர்கள் மிகுந்த மன உறுதியை வெளிப்படுத்தி கல்வியில் முன்னேறி வருகின்றனர். இந்தத் தகமைகள் மூலம், எமது மாணவர்கள் எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொண்டுள்ள நம்பிக்கையுணர்வை அவர்கள் கொண்டிருக்க முடியும், எனவே அவர்கள் தமக்கு முன்னால் இருக்கும் எந்த வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ள முடியும்.

“கேம்பிரிட்ஜ் பாடசாலைகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், அவர்கள் மீண்டும் ஒரு முறை தமது மாணவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக, கல்வியின் மீது மிகுந்த ஈடுபாடு மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்,” என்று குறிப்பிட்டார். 

கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் பிராந்தியப் பணிப்பாளரான மகேஷ் ஸ்ரீவஸ்தவா அவர்கள் கூறுகையில்: “மாணவர்களின் அர்ப்பணிப்பு, ஆசிரியர்களின் ஓயாத ஈடுபாடு மற்றும் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் தொடர்ச்சியான ஆதரவின் மூலம், இலங்கையில் கேம்பிரிட்ஜ் மாணவர்களின் பயணம் தொடர்ந்து ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளதுடன், மிகச்சிறந்த பெறுபேறுகளுக்காக அனைத்து மாணவர்களையும் நாம் பாராட்டுகிறோம். 2023 ஜூன் பரீட்சைத் தொடரில் அவர்களின் சாதனைகளை நாம் கொண்டாடும் இத்தருணத்தில், இந்த பெறுபேறுகள் கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி, எதிர்காலத்திற்கு அவர்களை வலுப்படுத்தும் அவர்களுடைய நெகிழ்திறனையும் பிரதிபலிக்கிறது என்பதை நாம் அங்கீகரிக்கிறோம். ஒன்றாக இணைந்து, மாணவர்கள் தங்கள் விதியை நம்பிக்கையுடன் வடிவமைக்கவும், தமக்கு முன்னேயுள்ள வரையறையற்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும் நாம் வழி வகுக்கிறோம்,” என்று குறிப்பிட்டார். 

மற்ற பரீட்சை சபைகளைப் போலவே, கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் ஆனது கேம்பிரிட்ஜ் தகமைகளின் தரத்தை படிப்படியாக 2019 இல் ஏற்பட்ட தொற்றுநோய்க்கு முந்தைய தரத்திற்கு நகர்த்துகிறது. இந்த ஆண்டின் தரநிலை 2019 ஆம் ஆண்டின் தரநிலைக்கு மீளவும் திரும்பியுள்ளதுடன், மேலும் தர வரையறைகளை அமைக்கும் போது தொற்றுநோயின் தாக்கமும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. தொற்றுநோய்க்கு முன் A தரத்தைப் பெற்றிருக்கக்கூடிய ஒரு மாணவர் 2023 இல் A தரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார் என்பதே இதன் அர்த்தமாகும்.

இலங்கை முழுவதிலும் உள்ள 50 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் தமது மாணவர்களுக்கு கேம்பிரிட்ஜ் கற்கைநெறிகளையும் தகமைகளையும் வழங்குகின்றன. கேம்பிரிட்ஜ் Pathway பாடத்திட்டமானது மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு நெகிழ்வுத்தன்மையையும் தெரிவையும் வழங்குகிறது. கேம்பிரிட்ஜ் IGCSE இல் 70 க்கும் மேற்பட்ட பாடங்கள் கிடைக்கின்றன மற்றும் கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் AS மற்றும் உயர் தரத்தில் 55 க்கும் மேற்பட்ட பாடங்கள் வழங்கப்படுகின்றன.

Cambridge Assessment International Education பற்றி
Cambridge Assessment International Education ஆனது, பாடசாலை மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார்படுத்துவதுடன், அறிவுபூர்வமான ஆர்வம் மற்றும் கற்றுக்கொள்வதற்கான நிலையான ஆர்வம் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவுகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக நாம் உள்ளோம்.

எமது Cambridge Pathway ஆனது மாணவர்களுக்கு 5 முதல் 19 வயது வரையிலான கல்வியின் வெற்றிக்கான தெளிவான பாதையை வழங்குகிறது. பாடசாலைகள் தமது மாணவர்கள் எவ்வாறு கற்க வேண்டும் என்பதை அடியொற்றி பாடத்திட்டத்தை வடிவமைக்க முடியும். இது பரந்த அளவிலான பாடங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்குவதற்கான நெகிழ்வான வழிகளையும் கொண்டுள்ளது. இது மாணவர்கள் புதிய திறன்களையும் பரந்த உலகத்தையும் கண்டறிய உதவுகிறது. மேலும், அவர்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை அவர்களுக்கு வழங்குவதால், அவர்கள் பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் தொழிலில் சாதிக்க முடியும்.

Cambridge Assessment International Education என்பதன் சுருக்கமான பெயரே Cambridge International ஆகும்.

மேலதிக விபரங்களுக்கு: www.cambridgeinternational.org

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT