Saturday, April 27, 2024
Home » கொவிட்-19 காரணமாக நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் சமூக-பொருளாதாரத்திற்கு உதவி

கொவிட்-19 காரணமாக நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் சமூக-பொருளாதாரத்திற்கு உதவி

- IOM, ILO, ஜப்பான் அரசின் செயற்றிட்டம் வெற்றிகரமாக நிறைவு

by Rizwan Segu Mohideen
July 19, 2023 1:38 pm 0 comment

கொவிட்-19 இனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வேலையின்மை மற்றும் சம்பளம் வழங்கப்படாத பிரச்சினைகளுக்கு அவர் முகம் கொடுத்திருந்தனர். நாடு திரும்பிய இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சமூக-பொருளாதார பாதிப்பிலிருந்து மீள்வதற்கு உடனடி, நடுத்தர மற்றும் நீண்ட கால தலையீடுகள் அவசியமாக இருந்தது.

இந்த சவால்களை எதிர்கொள்ள, ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (Organization for Migration – IOM) மற்றும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILO) ஆகியன, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுடனான ஒத்துழைப்புடன், திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் கட்டமைக்குகும் சமூக-பொருளாதாரத்தை ஆதரிக்கும் திட்டத்தை செயற்படுத்தியது.

இது தொடர்பில், புலம்பெயர்ந்து நாடு திரும்பியவர்கள், ஆதரவளிக்கும் சமூகங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, பங்கேற்பு கிராமப்புற தேவைகள் மதிப்பீடு (PRNA) நடத்தப்பட்டது. இதில் 20 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டன.

2021 ஏப்ரல் இல் திட்டத்தைத் IOM தொடங்கியதோடு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநொச்சி, அநுராதபுரம், புத்தளம், இரத்தினபுரி, குருநாகல், களுத்துறை, காலி ஆகிய 9 மாவட்டங்களில் இத்திட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தியது.

கொவிட்-19 பரவல் காரணமாக நாடு திரும்பிய இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சமூக-பொருளாதார மீள் கட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் திட்டமானது, இலங்கையில் மிகவும் சவாலான காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பொருட்கள் மற்றும் உபகரண பற்றாக்குறை இருந்தபோதிலும், அனைத்து கட்டுமானங்கள், புனரமைப்புகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆதரவளிக்கும் இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் பொருட்களை IOM ஆனது இனால் கொள்வனவு செய்ய முடிந்தது.

இந்த திட்டத்தில், 550 இற்கும் மேற்பட்ட நாடு திரும்பிய தொழிலாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 1,000 இந்கும் மேற்பட்ட நாடு திரும்பிய புலம்பெயர்ந்த சமூகங்களுக்கு தொழில் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி சென்றடைந்துள்ளது. நாடு திரும்பிய 500 பேர் வேலை வாய்ப்புகளுக்காக மேம்படுத்தப்பட்ட பொது வேலைவாய்ப்பு சேவைகள் (PES) மூலம் பயனடைந்துள்ளனர்.

NAITA இன் வேலை அடிப்படையிலான கற்றல் திட்டங்களால் 100 பேர் பயனடைந்துள்ளனர். அதே நேரத்தில் பயிற்சி வழங்கலை மேம்படுத்துவதற்காக 5 தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதோடு, நாடு திரும்பியவர்களுக்கான திறன் சான்றிதழ் திட்டங்களுக்கு உதவும் வகையில் 2 அரச தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவிக்காக ஜப்பான் அரசாங்கத்திற்கும், இந்த திட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்தி முடித்த அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அவர்களின் பணியாளர்களுக்கு, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆகியன நன்றி தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT