மேற்குவங்க பெயரை மாற்ற மத்திய அரசு தாமதம்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு | தினகரன்

மேற்குவங்க பெயரை மாற்ற மத்திய அரசு தாமதம்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதித்து வருவதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி கூறியதாவது:

மேற்குவங்க மாநிலத்தின் பெயரை அதன் பாரம்பரியத்துக்கு ஏற்ப ‘பங்களா’ என்று பெயர் மாற்றம் செய்வதற்கு மாநில சட்டப் பேரவையில் கடந்த ஜூலை 26-ம் திகதி ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பல மாதங்களாகியும் மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், நிறுவனங் களின் பெயர்களை பாஜக தனது விருப்பத்துக்கேற்ப பெரும்பாலும் தினமும் மாற்றிவருகிறது. ஆனால் மேற்குவங்கத்தின் பெயரை ‘பங்களா’ என்று மாற்றம் செய்வ தற்கு சட்டசபை தீர்மானம் நிறை வேற்றியும் மத்திய அரசு தாமதித்து வருகிறது.

மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை. அப்படிப்பட்ட கட்சி பெயர் மாற்றம் தொடர்பாக தனது விருப்பப்படி முடிவு செய்யக் கூடாது. சட்டப்பேரவை தீர்மானத்துக்கும் மாநில மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மேற்குவங்கத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


Add new comment

Or log in with...