Sunday, April 28, 2024
Home » மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு Green X Talks கலந்துரையாடலை முன்னெடுத்த அதானி

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு Green X Talks கலந்துரையாடலை முன்னெடுத்த அதானி

- நெகிழ்ச்சியான மற்றும் உறுதியான தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்ட முன்மாதிரியாளர்கள்

by Rizwan Segu Mohideen
December 7, 2023 3:49 pm 0 comment

டிசம்பர் 03 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான தினத்தைக் குறிக்கும் வகையில், அதானி குழுமம் Green X Talks கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள், பல்வேறு தடைகளை வென்ற மாற்றுத் திறனாளிகள், நெகிழ்ச்சியான மற்றும் அர்ப்பணிப்புடனான தங்கள் வாழ்க்கைக் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர். கடந்த டிசம்பர் 04 ஆம் திகதி Adani Corporate House இல் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அசாத்தியமான விடயங்களை தங்கள் சொந்த வழிகளில் மீளமைத்து, சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய ஊக்கமளிக்கும் ஆளுமைகளை முன்னிறுத்தினர்.

அதானி குழுமத்தின் Airport Business பணிப்பாளர் ஜீத் அதானி இங்கு தெரிவிக்கையில், “Green X ஆனது மாற்றுத்திறனாளிகளின் பரந்த திறனை குறிக்கிறது. பச்சை நிறம் வாழ்க்கை நிறைந்த உலகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, வளர்ச்சி, நம்பிக்கை, முடிவற்ற சாத்தியக்கூறுகளை குறிக்கிறது. X என்பது மர்மத்தைக் குறிக்கிறது. இது ஏற்றுக்கொள்ளல் மற்றும் பலனைப் பெறுவதற்காக காத்திருக்கும் அசாதாரண திறமையின் சக்திவாய்ந்த அடையாளமாக உள்ளது. இது மனித உயிரோட்டத்தின் மீளெழுச்சி, சவால்களை சமாளிப்பதற்கான உறுதிப்பாடு மற்றும் துன்பத்தின் மூலம் பாதைகளை செதுக்கும் வலிமை ஆகியவற்றைக் குறிக்கிறது. Green X ஆனது, அதிகாரமளித்தல் மற்றும் உள்ளீர்த்தலுக்காக குரல் கொடுப்பதை மையமாக கொண்டுள்ளதோடு, ஒவ்வொரு நபரையும் அவரது உடல் ரீதியான அல்லது மன ரீதியான திறனைப் பொருட்படுத்தாமல் அவர்களை எமது நிறுவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதுகிறது.” என்றார்.

2016 முதல் இந்திய ஆடவர் கட்புலனற்ற கிரிக்கெட் அணியின் தலைவரான அஜய் குமார் ரெட்டி இந்நிகழ்வில் தனது கதையை கூறியிருந்தவர்களில் ஒருவராவார். அவர், 2017 கட்புலனற்றோர் ரி20 உலகக் கிண்ணம் மற்றும் 2018 கட்புலனற்றோர் உலகக் கிண்ணங்களை வென்ற அணிக்கு அவர் தலைவராக இருந்தார்.

மற்றொரு பேச்சாளர் நிபுன் மல்ஹோத்ரா, ஒரு மாற்றுத்திறனாளி உரிமைக்கான ஆர்வலரும் சமூக தொழில்முனைவோருமாவார். அவர் சவால்களை சமாளித்து பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார். அவர், ஒரு ஊனமுற்றோர் உரிமைகளுக்கான அமைப்பான மல்ஹோத்ரா நிப்மேன் அறக்கட்டளையின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஆவார். அவர் Wheels for Life அமைப்பின் நிறுவுனரும், World Enabled இன் வருகை தரு ஆராய்ச்சியாளருமாவார். அவர் உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) உலகளாவிய செயற்பாட்டாளராகவும் உள்ளார்.

இந்த நிகழ்வில் நான்கு குழு உறுப்பினர்கள் இருந்தனர், அவர்கள் பணியிடத்திற்கான அணுகல் மற்றும் உள்ளீர்த்தல் பற்றி பேசினர். பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான தருண் குமார் வஷிஷ், IIM-A இல் பார்வைக் குறைபாடுள்ள முதலாவது கலாநிதி (Ph.D) பட்டம் பெற்றவராவார். அவரது ஆய்வு, இயலாமையின் பின்னணியில் நிறுவனம் மற்றும் சாதகமான அடையாளங்களை ஆராய்கிறது.

மற்றொரு குழு உறுப்பினரான அலினா ஆலம், 2017 ஆம் ஆண்டில் Mitti Café இனைத் ஆரம்பித்தவராவார். அப்போது அவருக்கு 23 வயதாகும். பல பெரிய விமான நிலையங்களில் உள்ள அவரது 35 கபேக்களில் சுமார் 400 பேர் பணிபுரிகின்றனர். இந்நிறுவனம் பல்வேறு வகையான குறைபாடுகள் உள்ளவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதோடு, இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமான உணவுகளை வழங்கியுள்ளது.

பேச்சாளர் மருத்துவர் அனிதா ஷர்மா போலியோ காரணமாக, இடுப்பிற்கு கீழ்ப் பகுதி செயலிழந்தவராக உள்ளார். இயலாமை மற்றும் தொழில்முனைவில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார். “Drive On My Own” அறக்கட்டளை மற்றும் Inkpothub ஆகியவற்றின் நிறுவுனரான அவர், ஒரு DEI ஆலோசகராகவும் உள்ளார். இந்தியாவின் முதல் பெண் ஸ்கைடைவர் மாற்றுத்திறனாளியாக ஷர்மா தன்னை அடையாளப்படுத்துகின்றார்.

பார்வையற்றோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் பூஷன் புனானியும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தார். பார்வைக் குறைபாடுள்ள மக்களின் கல்விக்கான சர்வதேச கவுன்சிலின் உப தலைவராக அவர் உள்ளார்.

இதன் ஆரம்ப நிகழ்வை ரஷ்மி பாட்டீல் மேற்கொண்டார். செவித்திறன் குறைபாடுள்ள பாட்டீல், தனது தீவிர ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக பரதநாட்டியத்தில் மேம்பட்ட பட்டம் பெற்றார். அவர் 6 வயதில் பரதநாட்டியம் கற்கத் தொடங்கி, புகழ்பெற்ற நடனக் கலைஞராக மாறினார். அவர் அழகுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளதோடு, உலகளாவிய நகை வியாபாரத்தையும் அவர் நடத்தி வருகிறார்.

இறுதி அம்சமாக அங்கிதா படேலின் ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றது. அவர் கிளாசிக்கல் உள்ளிட்ட பிரபலமான பாடல்களின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். பார்வைக் குறைபாடுள்ள இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில் ரீதியான பாடகராக இருந்து வருகிறார்.

அதானி குழுமம் பற்றி
இந்தியாவின் அகமதாபாத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அதானி குழுமம், லொஜிஸ்டிக்ஸ் (கடல்துறைகள், விமான நிலையங்கள், தளவாடங்கள், கப்பல் மற்றும் புகையிரதம்), வளங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, எரிவாயு மற்றும் உட்கட்டமைப்பு, விவசாயம் (உணவுகள், சமையல் எண்ணெய், உணவுப் உற்பத்திகள், குளிர்பதனிடல் கிடங்கு, தானியக் களஞ்சியங்கள்), ரியல் எஸ்டேட், பொதுப் போக்குவரத்து உட்கட்டமைப்பு, நுகர்வோர் நிதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல்வேறு வணிகங்களின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகும். அதானி அதன் வெற்றிக்கும் தலைமைப் பதவிக்கும் அதன் அடிப்படைத் தத்துவமான ‘தேசத்தைக் கட்டியெழுப்புதல்’ மற்றும் ‘நன்மையுடன் கூடிய வளர்ச்சி’ நிலைபேறானன வளர்ச்சிக்கான வழிகாட்டும் கொள்கைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நிலைபேறானதன்மை, பன்முகத்தன்மை மற்றும் பகிரப்பட்ட மதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) திட்டங்கள் மூலம் சூழலைப் பாதுகாப்பதற்கும் சமூகங்களை மேம்படுத்துவதற்கும் குழுமம் உறுதிபூண்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவலுக்கு www.adani.com 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT