ரவி கருணாநாயக்க, அமெரிக்க கடற்படைக்கு நன்றி தெரிவிப்பு | தினகரன்


ரவி கருணாநாயக்க, அமெரிக்க கடற்படைக்கு நன்றி தெரிவிப்பு

 
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் மற்றும் இலங்கையின் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோருடன் USS Lake Erie கப்பலிற்கு விஜயம் செய்த அவர், இலங்கையில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அமெரிக்க கடற்படை வீரர்கள் வழங்கிய பங்களிப்பு தொடர்பில் நன்றி தெரிவித்துள்ளார். 
 
 
இதன்போது உரையாற்றிய என அமெரிக்கத் தூதுவர் கேஷப், “அமெரிக்காவின் சிறப்பினை மீண்டும் வெளிப்படுத்தியுள்ள கப்பலின் கெப்டன் டெர்ரன் மெக்பெர்சனிற்கும் அமெரிக்க வீர, வீராங்கனைகள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்” என்றார்.
 
 
“மிக முக்கியமாக எமது இரு நாட்டு இராணுவங்களினதும் நிவாரணச் செயற்பாட்டின் போது விருத்தி செய்யப்பட்ட அனுபவங்களும், நம்பிக்கையும் மனிதநேய உதவியின் மேலதிக ஒத்துழைப்பினை மேம்படுத்தும் என நமக்குத் தெரியும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
கடந்த இரு வாரங்களில், அமெரிக்க இராணுவத்தினரும், துருப்பினரும் தெற்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் புனர்வாழ்விற்கு நிபுணத்துவம் மற்றும் ஆள்பலத்தினை வழங்கியிருந்தன. 
 
 
இலங்கை கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்புப் படையினர் உள்நாட்டு அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து, பாடசாலைகளை சுத்தம் செய்து மாணவர்கள் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும், கிணற்றினை சுத்திகரிப்பதற்கும், மாத்தறையில் சேதமடைந்த அணைகளை மீளமைக்கவும் உதவினர்.
 
மேலதிகமாக, பாதுகாப்பான குடிநீர், தேகாரோக்கிய தொகுதிகள், அவசர காலநிலை உறைவிடப் பொருட்கள், வீட்டு திருத்தத் தொகுதிகள் மற்றும் நோய்த் தடுப்பிற்கு சிக்கலான சுகாதார பராமரிப்பு சேவைகள் வழங்குவதற்கு உள்நாட்டு நிறுவனங்களுக்கு அண்ணளவாக ரூ. 350 மில்லியனை (2.3 மில்லியன் அமெரிக்க டொலர்) சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) வழங்கியுள்ளது.
 
 
 

Add new comment

Or log in with...