சீரற்ற காலநிலை; 80 பேர் மரணம்; தேடுதல் தொடர்கிறது (UPDATE) | தினகரன்

சீரற்ற காலநிலை; 80 பேர் மரணம்; தேடுதல் தொடர்கிறது (UPDATE)

 
சீரற்ற காலநிலை காரணமாக இது வரை 80 பேர் பலியாகியுள்ளதோடு, 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
பலியானோரின் எண்ணிக்கை வருமாறு...
 
களுத்துறை - 37
இரத்தினபரி -28
காலி - 11
மாத்தறை - 04
 
 

 
நாடு முழுவதும் நிலவும் அனர்த்த நிலை காரணமாக, இது வரை 13 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் களுத்துறை அனர்த்தத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 33 என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
 
 

(Picture courtesy of Kasun Pussewella - Floods at Veyangalle)

(Picture courtesy of Kasun J - Floods at Morawaka Town)

(Picture courtesy of Farhaan Nizamdeen - Floods at Tawalama town, Galle)

 

 
களுத்துறை மாவட்டத்தின் பதுரலிய மற்றும் கொபவககந்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 8 பேர் மரணமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்அறிவித்துள்ளது.
 
நாட்டில் நிலவும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மலைப்பாங்கான பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
 
எனவே பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.
 
அனர்த்தங்கள், உயிர் ஆபத்துகள் தொடர்பில் அறிவிக்க 117 எனும் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
அத்துடன்...
011 2136226
011 2136136 
077 3957900
 
அது தவிர
 
011 2136222
011 2670002
 
ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
 

 
களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, போகஹவத்தை பிரதேசத்திலுள்ள தெபவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இதில் சிக்குண்ட 04 பேரை தேடும் நடவடிக்கை தொடர்வதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
 

 


Add new comment

Or log in with...