Monday, May 6, 2024
Home » ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகையை முன்னிட்டு தலைநகரில் வரவேற்பு பதாகைகள்

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகையை முன்னிட்டு தலைநகரில் வரவேற்பு பதாகைகள்

by Gayan Abeykoon
April 24, 2024 8:24 am 0 comment

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று  இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் தலைநகர் கொழும்பில் வரவேற்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைக்கப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.

514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஈரான் அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் 2011 ஆம் ஆண்டு உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி  பாகிஸ்தான் விஜயத்தை நிறைவு செய்து, இன்று நாட்டுக்கு வருகிறார் என  வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஐ. ஏ. கலீலுர் ரஹ்மான், எம்.காதர், எம்.முசம்மில் போன்றோர்களினால் இந்த வரவேற்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT