Tuesday, April 30, 2024
Home » வெலிமடையில் இரு கார்கள் மோதி விபத்து

வெலிமடையில் இரு கார்கள் மோதி விபத்து

ஒருவர் படுகாயம்

by mahesh
April 17, 2024 10:20 am 0 comment

வெலிமடையிலிருந்து நுவரெலியா நோக்கிச் பயணித்துக்கொண்டிருந்த காரொன்றும் எதிர்த்திசையில் பயணித்துக்கொண்டிருந்த மற்றுமொரு காரும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) இந்த விபத்து இடம்பெற்றதுடன், வேகக் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து சம்பவித்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக கெப்பெட்டிப்பொல பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊவா சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT