Thursday, May 9, 2024
Home » பாகிஸ்தானில் சீன பிரஜைகள் மீது தற்கொலைத் தாக்குதல்

பாகிஸ்தானில் சீன பிரஜைகள் மீது தற்கொலைத் தாக்குதல்

- குண்டு துளைக்காத வாகனத்தின் மீதே தாக்குதல்

by Rizwan Segu Mohideen
April 16, 2024 7:06 pm 0 comment

சீனப் பிரஜைகள் மீதான பெஷாம் தற்கொலைத் தாக்குதல் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் அவர்களது வாகனம் குண்டு துளைக்காதது அல்லது வெடிகுண்டு துளைக்காதது எனத் தெரியவந்துள்ளதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

ஷாங்லா மாவட்டத்தில் உள்ள பிஷாம் நகரில் மார்ச் 26 அன்று நடந்த இந்த தாக்குதலில் ஒரு பாகிஸ்தான் பிரஜையும் ஐந்து சீன பொறியாளர்களும் கொல்லப்பட்டனர்.

“இஸ்லாமாபாத்தில் இருந்து தங்கியிருக்கும் முகாமுக்குச் சென்று கொண்டிருந்த வெளிநாட்டினரின் மீது தற்கொலை குண்டுதாரி ஒருவர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதிவிட்டார்” என்று ஏப்ரல் 4 அன்று மலாக்கண்டி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறியதாக அறிக்கை கூறுகிறது.

தாக்குதலுக்கு இலக்கான பஸ், அடுத்த பஸ்ஸில் இருந்து 15 அடி தூரத்தில் சென்று கொண்டிருந்ததாகவும், தற்கொலைப் படைத் தீவிரவாதி தனது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை பலியானவர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது மோதியதை அடுத்து, 300 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

ஜியோ நியூஸ் படி, சீன நாட்டினரை ஏற்றிச் செல்லும் பஸ்களில் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மார்ச் 26 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை அடுத்து அலட்சியமாக செயற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் உத்தரவிட்டதாக தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

லாகூரில் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த அத்தாவுல்லா தரார் , “பிராந்திய பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்தில், சீனத் தொடரணியைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியவர் பயன்படுத்திய வாகனத்தின் பாகங்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

இந்த வார தொடக்கத்தில், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் (CTD) இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய 10 பயங்கரவாதிகள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கியோரை கைது செய்துள்ளனர்.

தற்கொலை குண்டுதாரியை ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு கொண்டு சென்றதற்கு பொறுப்பான பயங்கரவாதக் குழுத் தலைவர், மற்ற நான்கு உதவியாளர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

இந்தத் தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பாகிஸ்தான் சிவில் மற்றும் இராணுவத் உறுதியளித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சீன நாட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ஷெஹ்பாஸ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT