Saturday, April 27, 2024
Home » மொரிசன்: இலங்கையின் மருந்தாக்கல் தொழிற்துறையின் மாற்றத்தின் முன்னோடி

மொரிசன்: இலங்கையின் மருந்தாக்கல் தொழிற்துறையின் மாற்றத்தின் முன்னோடி

by Gayan Abeykoon
March 29, 2024 11:23 am 0 comment

முன்னர் ஜே.எல்.மொரிசன் சன் அன்ட் ஜோன்ஸ் (சிலோன்) பில்சி என  அறியப்பட்ட மொரிசன் நிறுவனம், இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டது முதல் நாட்டின்  மருந்துப் பொருட்கள் உற்பத்தித் தொழிற்துறையில் முன்னோடியாக அமைந்துள்ளது.  1959ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம், முகத்துவாரம், அளுத்மாவத்தையில்  தனது முதல் தொழிற்சாலையை நிறுவி மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட  ஆரம்பித்ததுடன், நாட்டின் பொதுவான மருந்துப்பொருட்கள் உற்பத்தியில்  ஈடுபடும் முன்னோடியான நிறுவனம் எனும் அந்தஸ்தைப் பெற்றிருந்தது.

2013ஆம் ஆண்டில், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை  நிறுவனமாக மொரிசன் அங்கம் பெற்றதுடன், 2017ஆம் ஆண்டில், இந்த வர்த்தக நாமம்  மொரிசன் என மீள்-வர்த்தக நாமமாக்கப்பட்டு, புத்தாக்கம் மற்றும் வளர்ச்சி  ஆகியவற்றுக்கான தனது அர்ப்பணிப்பை பிரதிபலித்திருந்தது.

2020ஆம் ஆண்டில், ஹோமகம பகுதியில் நவீன வசதிகள் படைத்த  மருந்துப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஆய்வு நிலையத்தை மொரிசன்  ஆரம்பித்தது. 2022ஆம் ஆண்டில் இதன் வணிக ரீதியான உற்பத்திப் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இதற்காக 4 பில்லியன் ரூபாய் முதலீடு  செய்யப்பட்டிருந்தது. இந்த உற்பத்திப் பகுதியில் நாட்டின் மாபெரும் பிந்திய  பொது OSD (வாய் மூலம் உள்ளெடுக்கும் திண்ம மருந்துகள்)/OLD (வாய் மூலம்  உள்ளெடுக்கும் திரவ மருந்துகள்) கொள்ளளவு காணப்படுகின்றது. இந்த உற்பத்தி  ஆலையினூடாக, உள்நாட்டுக்கு பிரத்தியேகமான மருந்துப் பொருள் வர்த்தக நாமம்  ஒப்பற்ற வகையில் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கையின் மருந்துப் பொருட்கள் உற்பத்தி தொழிற்துறை  சவால்களுக்கு முகங்கொடுக்கின்றது. நாட்டின் மருந்துத் தேவையில் 5% ஐ  மாத்திரமே உள்நாட்டு உற்பத்தியினூடாக நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய நிலை  காணப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்தத் தொழிற்துறையை மேம்படுத்துவதனூடாக,  பெருமளவு அந்நியச் செலாவணியை இலங்கையால் சேமித்துக் கொள்ள முடியும்  என்பதுடன், ஏனைய நாடுகளுக்கு மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்யும்  நடவடிக்கைகளையும் ஆரம்பிக்க முடியும்.

Morison’s Gripe Mixture, Morison’s Lacto Calamine, மற்றும்  Morison’s Valmelix போன்ற மருந்தகங்களில் கொள்வனவு செய்யக்கூடிய மருந்து  வகைகளுக்கு மொரிசன் புகழ்பெற்றுள்ளது. அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும்  வைத்தியர்களின் களஞ்சியப்படுத்தல் சந்தைகளுக்காக மொத்த மருந்துப் பொருட்கள்  உற்பத்திக்காக இந்த வர்த்தக நாமம் பெருமளவில் அறியப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT