Saturday, April 27, 2024
Home » இந்தியாவுடன் இணைந்து நிலையான கூட்டுத் திட்டங்களில் ஜேர்மனி பணியாற்றும்

இந்தியாவுடன் இணைந்து நிலையான கூட்டுத் திட்டங்களில் ஜேர்மனி பணியாற்றும்

by Rizwan Segu Mohideen
March 28, 2024 2:06 pm 0 comment

ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இந்து-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கோண ஒத்துழைப்பு திட்டங்களில் இந்தியாவும் ஜேர்மனியும் ஒத்துழைத்து வருகின்றன என்று ஜேர்மன் தூதுவர் கலாநிதி பிலிப் அக்கர்மேன் தெரிவித்துள்ளார். WION உடனான ஒரு நேர்காணலில், தூதுவர் அக்கர்மேன் இந்த கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததோடு இரு நாடுகளின் ஒருங்கிணைந்த நிபுணத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

“நாங்கள் இணைந்து உருவாக்கிய ஒரு புதிய திட்டம் இது. ஏனெனில் இந்திய அறிவு மற்றும் ஜேர்மன் அறிவு இரண்டும் ஒன்றாக இணைந்துள்ளது இந்த கூட்டாண்மை மிகவும் சுவாரஸ்யமானது.ஆபிரிக்காவில் கானா, பெனின், மலாவியிலும் லத்தீன் அமெரிக்காவில் பெருவிலும் நாம் இணைந்து திட்டங்களைச் செய்யத் தொடங்கினோம். ” என்று அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளின் கூட்டு முயற்சிகளின் விரிவாக்க நோக்கத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் திட்டங்கள் முதன்மையாக நிலையான பயிற்செய்கை மற்றும் விவசாயத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.

2022 மேமாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ‘பசுமை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இந்திய-ஜேர்மன் கூட்டாண்மை’ (GSDP) நிறுவப்பட்டது. இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாத்தல் மற்றும் உமிழ்வு இல்லாத நகர்ப்புற மையங்களை உருவாக்குதல் என்பன இந்த கூட்டாண்மையின் நோக்கமாகும்.

“இந்தக் கூட்டாண்மை காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப, காலநிலை மாற்றத்தைத் தணிக்க, இயற்கையைப் பாதுகாத்தல், இயற்கை வாழ்விடத்தைப் பாதுகாத்தல் மற்றும் நகரங்களை சிறந்ததாகவும், அதிக உமிழ்வு இல்லாததாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாங்கள் மிகவும் உறுதியான முறையில், மிகவும் செயல்பாட்டுடன் தரையில் நிலைமையை மேம்படுத்த முயற்சிப்போம், அது அனைவருக்கும் நன்மை பயக்கும்” என்று தூதர் அக்கர்மேன் விரிவாகக் கூறினார்.

இந்தக் கூட்டாண்மையின் உறுதியான விளைவுகளை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார், அடுத்த பல ஆண்டுகளில் 10 பில்லியன் யூரோக்கள் இதற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். “இதன் கீழ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 பில்லியன் யூரோக்கள் செலவிடப்பட இருப்பதோடு கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த கூட்டாண்மைக்காக சுமார் 1.3 பில்லியன் யூரோக்களை செலவழிக்கப்பட்டுள்ளது, நாடு முழுவதும் திட்டங்களை உருவாக்க இந்த கூட்டாண்மை உதவுகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார். கொச்சி, ஆந்திரா, மணிப்பூர் மற்றும் கங்கை பள்ளத்தாக்கில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரந்த இந்தியா-ஜேர்மனி உறவைப் பற்றி கருத்து தெரிவித்த தூதுவர் அக்கர்மேன், ஆண்டின் இரண்டாம் பாதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார். “இந்த ஆண்டின் இரண்டாம் பாதிக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மேலும் அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம், தேர்தல் முடிந்ததும் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன், புதிய அரசாங்கத்துடன் அமர்ந்து பேசுவோம்” என்று அவர் கூறினார். .

புதுடில்லியில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தி; ஜேர்மன் வர்த்தகத் தலைவர்களின் பங்களிப்புடன் ஆசிய பசிபிக் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்தியாவுடன் ஜேர்மனியின் ஆழமான ஈடுபாட்டைக் குறிக்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT