Tuesday, May 7, 2024
Home » பௌத்த யாத்திரை தலமாக கந்தாராவை மாற்றத் திட்டம்

பௌத்த யாத்திரை தலமாக கந்தாராவை மாற்றத் திட்டம்

by gayan
April 27, 2024 12:30 am 0 comment

உலக பௌத்த மக்களின் புனித யாத்திரைக்கான சர்வதேச மையமாக கந்தாராவை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு உத்தேச கந்தாரா வழித்தட சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. சிந்து சட்ட மன்ற உறுப்பினர் கலாநிதி ரமேஷ் குமார் வான்க்வானி இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளார்.

‘பௌத்த மக்களின் ஒரு புனித யாத்திரைத் தலமாகவும், சர்வதேச சுற்றுலா மையமாகவும் கந்தாராவை மாற்ற இந்த சட்டமூலம் வழிவகுக்கும்’ என்று குறிப்பிட்டுள்ள வான்க்வானி, பௌத்த மக்கள் செறிவாக வாழும் நாடுகளுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்புறவு மேலும் மேம்படவும் பௌத்த சமய, கலாசார சுற்றுலாத் துறை வளர்ச்சியடையவும் இது பெரிதும் உதவும் என்றும் கூறியுள்ளார்.

பௌத்த கலாசாரத்துடன் சம்பந்தப்பட்ட கந்தாரா நாகரிகத்தின் 90 வீதமான புனித சின்னங்களும் கலைப்பொருட்களும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கந்தாராவில் காணப்படுகிறது.

இந்த சட்டமூலத்திற்கு பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT