Saturday, April 27, 2024
Home » உத்தேச தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழு அமைக்கும் பணி துரிதம்

உத்தேச தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழு அமைக்கும் பணி துரிதம்

கே. ஸ்ரீபவன் குழுவின் அவதானிப்புகள் அடங்கிய அறிக்கை அமைச்சுக்கு

by mahesh
March 27, 2024 10:30 am 0 comment

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைப்பதற்கான, முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான குழுவின் அவதானிப்புகள் அடங்கிய அறிக்கை அமைச்சிடம் நேற்று (26) கையளிக்கப்பட்டதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அது தொடர்பான அறிக்கையை ஆராய்ந்த பின்னர் தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை இவ்வருடத்தில் நிறுவ முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்,

2021–, 2022 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் 17 பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த வருடங்களில் திட்டமிட்டபடி மாணவரை இணைக்கும் பணி நடக்கவில்லை என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை உறுதிப்படுத்த உரிய ஆவணங்கள் என்னிடம் உள்ளன.

கடந்த காலத்தில் ஏற்பட்ட சில சிக்கல்களினால் சில பல்கலைகழகங்களின் இறுதியாண்டு மாணவர்கள் சரியான நேரத்தில் படிப்பை முடிக்க முடியாமல் இன்னும் பல்கலைகழகங்களில் தங்கி உள்ளனர். விரிவுரைகள் மற்றும் நடைமுறைக் கற்கைகளை நடத்துவதற்குத் தேவையான வகுப்பறை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன.

ஆனால் இந்த சிக்கல்களை தீர்க்க சில மாற்று வழிகளை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். இரத்மலானை பிரதேசத்தில் இருந்து மகாவலிக்கு சொந்தமான கட்டிடமும், களனி பிரதேசத்தில் இருந்து அரசாங்கத்துக்குச் சொந்தமான

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT