Thursday, May 9, 2024
Home » கல்முனை ஆதார வைத்தியசாலையில் வன தின நிகழ்வு

கல்முனை ஆதார வைத்தியசாலையில் வன தின நிகழ்வு

by sachintha
March 26, 2024 11:39 am 0 comment

சர்வதேச வன தினத்தினையொட்டி கல்முனை ஆதார வைத்தியசாலையில் பெருநிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

வைத்தியசாலை திட்டமிடல் பிரிவினரின் ஏற்பாட்டிலும், தரமுகாமைத்துவ பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் ப.செல்வகுமாரின் ஒருங்கிணைப்பிலும் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட வனஅலுவலர் ஆர்.எம்.விஜயபால, அம்பாறை மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் எஸ். உதயராஜன், விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட உதவி வனஅலுவலர் கலாநிதி.எம்.ஏ..ஜாயா, அம்பாறை மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பிரிவு பிரதிப்பணிப்பாளர் எச்.பி.அனீஸ், கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், கல்முனை வடக்கு வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரி ​ெடாக்டர் ந. ரமேஸ், கல்முனை பிரதேச சுற்றாடல் சபை அதிகாரி திருமதி.பி. செவ்வேற்குமரன், அக்கரைப்பற்று வனவள பாதுகாப்பு அதிகாரிகளான எஸ்.எம். சபிக் மற்றும் ஏ. தியாகராஜா, கல்முனை கடற்படைத்தள கட்டளைத் தளபதி தம்மிக்க எக்கனாயக்க போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.

முதலில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் ‘பசுமைப் புரட்சியை நோக்கிய பயணம்’ தொனிப்பொருளுக்கான இலட்சினையானது திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மரநடுகை நிகழ்வும் நடைபெற்றது. மேலும் ‘புதிய வரவும் புதிய மரமும்’ எனும் தொனிப்பொருளின் ஊடாக வைத்தியசாலையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு மரக்கன்று வழங்கப்படும். அதன் முதற்கட்டமாக மகப்பேற்று விடுதியில் அன்றைய தினம் பிறந்த 8 குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவர்களினால் வரவேற்பு நடனம் மற்றும் ‘காடுகளை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நாடகம் ஆகிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிப்பும் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட உதவி வன அலுவலர் கலாநிதி ஜாயாவின் வன பாதுகாப்பு சம்மந்தமான உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பிரிவு பிரதிபணிப்பாளர் அனீஸ் உரையாற்றினார்.

பிரதம அதிதி அம்பாறை மாவட்ட வன அலுவலர் விஜயபால உரை நிகழ்த்தினார்.

வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், விடுதி பொறுப்பு வைத்திய அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், கணக்காளர், தாதிய பரிபாலகர், பரிபாலகி, நிர்வாக உத்தியோகத்தர், அனைத்து பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க உறுப்பினர்கள், வைத்தியசாலையின் நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வினை தமிழ் மொழியில் சுகாதார கல்வி பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி. என்.மனோஜினி மற்றும் சிங்கள மொழியில் பேச்சு மற்றும் மொழி சிகிச்சை பிரிவின் பொறுப்பு உத்தியோகத்தர் செல்வி.ரி. யாபா ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தனர்.

காரைதீவு குறூப் நிருபர்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT