Thursday, May 9, 2024
Home » சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாசாலையின் புதிய விளையாட்டு மைதானம் திறப்புவிழா

சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாசாலையின் புதிய விளையாட்டு மைதானம் திறப்புவிழா

by damith
March 25, 2024 11:46 am 0 comment

யாழ் சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாசாலையின் புதிய விளையாட்டு மைதான திறப்புவிழாவும் இல்ல விளையாட்டுப் போட்டியும் கடந்த வாரம் சிறப்பாக நடைபெற்றன. வித்தியாலய முதல்வர் திருமதி கலைவாணி அருள்மாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்கானை கோட்டக் கல்வி அதிகாரி நோபேட் உதயகுமார் பிரதம விருந்தினராகவும், இப்பாடசாலையின் முன்னாள் அதிபரும், தற்போதைய மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை அதிபருமான பா . பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தனராகவும், கனடாவில் இருந்து வருகை தந்த உலக சித்தன்கேணி ஒன்றிய உறுப்பினரும் ஓய்வுபெற்ற கணக்காய்வாளரும் பழைய மாணவருமான சு . உமாசுதான் மற்றும் ஓய்வுநிலை பொறியியலாளரும் பழைய மாணவருமான பூ . சிவநேசன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

சித்தன்கேணியில் நீண்ட காலமாக பொதுவிளையாட்டு மைதானம் இல்லாத குறை கனடா சித்தன்கேணி ஒன்றியம், சித்தன்கேணி இளைஞர் முன்னேற்ற கழகம், ஸ்ரீகணேசா வித்தியாசாலை மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் மேற்கொண்ட முயற்சியினால் ஈடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வசிக்கும் திருமதி சரோஜினி பரமநாதன் தமது பெற்றோர்களான அமரர்கள் முத்துலட்சுமி_ அப்பையா நினைவாக இவ்வுதவியை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.+

சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாசாலையில் தரம்_5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற பிரகலாதன் பிரணவன், நாகரூபன் பிரணவி ஆகிய இருவருக்கும் உலக சித்தன்கேணி ஒன்றிய உறுப்பினர்களான சி . அருணேஸ்வரன் (சிட்னி) மற்றும் க. குமரன் (பரிஸ்) ஆகியோரினால் இரண்டு புதிய துவிச்சக்கர வண்டிகள் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் வெட்டுப்புள்ளிக்கு மிகநெருங்கிய இரு மாணவர்களுக்கு தலா ரூபா 5000 சித்தன்கேணி உலக ஒன்றிய உறுப்பினர்களினால் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT