Thursday, May 9, 2024
Home » வடமாகாண உற்பத்திகளை இணையவழி ஊடாக சந்தைப்படுத்த FARM TO GATE செயலி அறிமுகம்

வடமாகாண உற்பத்திகளை இணையவழி ஊடாக சந்தைப்படுத்த FARM TO GATE செயலி அறிமுகம்

by damith
March 25, 2024 11:33 am 0 comment

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வழிகாட்டுதல்களுக்கு அமைய வடிவமைக்கப்பட்ட FARM TO GATE இணைய செயலியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். யாழ்ப்பாணம் ஒட்டகப்புலம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வின் போது இந்த இணைய செயலி மக்கள்மயப்படுத்தப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் உற்பத்திகளுக்கான இணையவழி சந்தை வாய்ப்புகளுக்கு வசதியளிக்கும் வகையில் FARM TO GATE இணைய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் வாழ்க்கையில் புத்துயிர் ஊட்டக்கூடிய ஒரு புதிய முயற்சியாக FARM TO GATE இணைய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இணைய செயலி அங்குரார்ப்பண நிகழ்வில் வடமாகாண ஆளுநரால் செயலியின் பயன்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

விவசாயிகள் மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் தங்கள் கடின உழைப்பிற்கான சிறந்த விலையையோ அல்லது நன்மைகளையோ பெற்றுக் கொள்வதற்கும், பரந்த சந்தை அணுகுவழிகளை அடைந்து கொள்வதற்கும் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக ஆளுநர் தெரிவித்தார். அங்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்த புதிய செயலியின் ஊடாக சிறுவிவசாயிகள், பண்ணை முயற்சியாளர்கள், வீட்டுத்தோட்ட முயற்சியாளர்கள், ஏனைய உற்பத்தி முயற்சியாளர்கள் நுகர்வோருடன் நேரடியாக இணைக்கப்படுவார்கள் எனவும் இதனூடாக இடைத்தரகர்களின் தலையீடு குறைக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

அத்துடன் இலகுவான சந்தைப்படுத்தல் மற்றும் சந்தை வாய்ப்பை அதிகரித்தல், உற்பத்திக்கான நியாயமான விலையை பெற்றுக் கொடுத்தல், பொருளாதாரத்திற்கு வலுவூட்டுதல், நிலைபேறான வளர்ச்சி, நுகர்வோருக்கான வசதிகளை மேம்படுத்துதல், உற்பத்தியாளர்களின் தரவுத்தளத்தை பேணுதல், உற்பத்திகளை பட்டியல்படுத்துதல் மற்றும் நுகர்வோர் கொள்வனவுக்கான கட்டளையிடல், பொருட்களை கொள்வனவு செய்துக் கொள்வது, குறுஞ்செய்தி ஊடாக தகவல்களை பரிமாற்றம் செய்யும் முறை மற்றும் எதிர்கால ஏற்றுமதி விவசாயத் திட்டம் உள்ளிட்ட பல தரவுகளை உள்ளடக்கிய பல்வேறு விடயங்கள் இந்த புதிய செயலியில் காணப்படுகின்றன. அந்த வகையில் FARM TO GATE இணைய செயலி இணையத்தளமாக மாத்திரமன்றி பொருளாதார மாற்றத்திற்கான உந்துதலாக அமையும் என வடக்கு ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார். ஜனாதிபதியினால் கடந்த 22 ஆம் திகதி Farm to Gate செயலி அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நடைபெறவுள்ளது. வடமாகாணத்தின் உற்பத்திகளுக்கான இணையவழி சந்தை வாய்ப்புகளுக்கு வசதியளிக்கும் வகையில் செயற்படுத்துமாறு ஆளுநரால் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதற்கமைய, விவசாயிகள் சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் வாழ்க்கையில் புத்துயிர் ஊட்டக்கூடிய ஒருபுதிய முயற்சியான Farm to Gate இணையசெயலி உருவாக்கப்பட்டுள்ளது.

எமது விவசாயிகள் சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள், தங்கள் கடின உழைப்பிற்கான சிறந்த விலையினையோ நன்மைகளையோ பெற்றுக் கொள்வதற்கும் பரந்த சந்தை அணுகுவழிகளை அடைந்து கொள்வதற்கும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். Farm to Gate என்ற இந்த செயலியின் நோக்கமானது இவ்வாறான சிறு விவசாயிகள், சிறு பண்ணை முயற்சியாளர்கள், வீட்டுத்தோட்ட முயற்சியாளர்கள், சிறுமுயற்சியாளர்கள் ஆகியோரை நுகர்வோருடன் நேரடியாக இணைப்பதுடன் தரகர்களின் தலையீடுகளை குறைப்பதும் ஆகும்.

Farm to Gate செயலியின் நன்மைகள்:

* மேற்படி செயலியின் மூலம் சந்தைப்படுத்தல் வசதிகள் பல்வேறு வழிகளில் மேம்படுத்தப்படும்.

* இலகுவான சந்தைப்படுத்தல் மற்றும் சந்தை வாய்ப்பை அதிகரித்தல். சிறு உற்பத்தியாளர்களுக்கு பரந்த சந்தைவாய்ப்பை வழங்குதலும், நுகர்வோர் தமது தேவைகளை தெரிவு செய்வதற்கான மேம்படுத்தப்பட்ட சந்தை வசதியை வழங்குதலும்.

* நியாயமான விலை_ உற்பத்தியாளர்களுக்கு நியாயமானவிலை கிடைப்பதற்கு வசதியளித்தலும் கொடுக்கல் வாங்கல்களில் வெளிப்படைத்தன்மை பேணுப்படுவதை உறுதி செய்தலும்.

* பொருளாதாரத்திற்கு வலுவூட்டுதல்_ சிறுதொழில் முயற்சியாளர்களதும் விவசாயிகளதும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துதல்.

* நிலைபேறான வளர்ச்சி_ நிலைபேறான விவசாய திட்டங்களை மேம்படுத்துதலும், உள்ளூர் பொருளாதாரத்திற்கு உதவுதலும்.

* நுகர்வோருக்கான வசதிகள்_ நுகர்வோருக்கான இலகுவான இணையவழி கொள்வனவு கட்டளை மற்றும் கொள்வனவு செய்யும் வசதிகளை வழங்குதல்.

Farm to Gate என்பது ஒரு இணையத்தளம் மட்டுமல்ல. இது ஒரு மாற்றத்திற்கான உந்துதலாகவும் அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து அரச திணைக்களங்களும் இந்த செயலியின் நாளாந்த தரவேற்றங்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு உறுதியுடன் இணைந்துள்ளன.

மேலும் இந்தச் செயலியானது விவசாயம் மற்றும் கைத்தொழில் முயற்சிகளின் நிலைபேறான திட்டங்களைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு சக்திவாய்ந்த நுட்பமாகும்.

* உற்பத்தியாளர்களின் தரவுத்தளம்_ விவசாயிகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளின் விபரங்கள் மற்றும் அமைவிடம் போன்ற விபரங்களை தரவுத்தளத்தில் காட்சிப்படுத்த முடியும்.

* உற்பத்திகளை பட்டியற்படுத்துதல்_ உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளின் விபரங்களுடன் படங்கள் மற்றும் விலை போன்ற விபரங்களையும் தரவேற்றம் செய்ய முடியும்.

* நுகர்வோர் கொள்வனவிற்கான கட்டளையிடல்_ நுகர்வோர் தேவையான பொருட்களை ஆராய்ந்து, தேர்ந்தெடுப்பதற்கும் கட்டளையிடுவதற்கும் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கும் இலகுவானது.

* குறுஞ்செய்திகளை பரிமாற்றும் முறைமை_ உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் நேரடியாக தொடர்பு கொள்வதற்கும் பொருட்களின் தரத்தினை உறுதி செய்வதற்கும் அவர்களுக்கிடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் வசதியளிக்கப்படுகின்றது.

* எதிர்கால ஏற்றுமதி விரிவாக்கத் திட்டம்_ விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கு வசதியளிப்பதுடன் உள்ளூர் வர்த்தகத்தின் மேம்படுத்துதல் மூலமும் எதிர்காலத்தில் ஏற்றுமதி விரிவாக்கப்பட்ட திட்டங்களை செயற்படுத்துதல்.

இந்த வகையில் Farm to Gate செயலியின் செயற்பாட்டிற்கு விவசாயிகளையும் சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களையும் அவர்களது உற்பத்திகளின் விபரங்களை பதிவேற்றம் செய்யுமாறும் அவற்றை காட்சிப்படுத்துமாறும் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நுகர்வோர்கள் மற்றும் பாவனையாளர்கள் தமக்குத் தேவையான தரமான பொருட்களை உடன் பெற்றுக் கொள்வதற்கும் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் இணைந்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வதற்கும் கோரப்படுகின்றது.

அரச உத்தியோகத்தர்களுக்கு Farm to Gate செயலி தொடர்பாக விழிப்புணர்வை அனைத்து தரப்பினருக்கும் வழங்குவதற்கும் இச்செயலியின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்புடனான ஆதரவினை வழங்குமாறும் ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT