Thursday, May 9, 2024
Home » பண்டிகை காலத்தில் லங்கா சதொசவினால் விலை குறைப்பு

பண்டிகை காலத்தில் லங்கா சதொசவினால் விலை குறைப்பு

- 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்

by Prashahini
March 22, 2024 11:21 am 0 comment

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

அதன்படி 12 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் நேற்று (21) முதல் புதிய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைக்கப்பட்ட பொருட்களின் விலைப்பட்டியல் பின்வருமாறு,

    • பெரிய வெங்காயம்    –  100 ரூபா குறைப்பு             – புதிய விலை 550 ரூபா.
    • சிவப்பு கௌபி       – 52 ரூபாகுறைப்பு                         – புதிய விலை 998 ரூபா.
    • வெள்ளை கௌபி      – 50 ரூபா குறைப்பு                 – புதிய விலை 1,100 ரூபா.
    • பாஸ்மதி அரிசி       – 20 ரூபா குறைப்பு                     – புதிய விலை 650 ரூபா.
    • பெரிய வெங்காயம்    – 10 ரூபா குறைப்பு                – புதிய விலை 350 ரூபா.
    • வெள்ளை சீனி    – 5 ரூபா குறைப்பு                             – புதிய விலை 265 ரூபா.
    • சிவப்பு சீனி    – 5 ரூபா குறைப்பு                                    – புதிய விலை 425 ரூபா.
    • சோயா மீட்       – 5 ரூபா குறைப்பு                                 – புதிய விலை 595 ரூபா
    • சிவப்பு அரிசி            – 2 ரூபா குறைப்பு                         – புதிய விலை 168 ரூபா

பண்டிகை காலத்தில் வழங்கப்படும் ரூ.4,500 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் தற்போது 3,480 ரூபாவுக்கு அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் கொள்வனவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த பொருட்கள் பொதியில் நூடுல்ஸ் பக்கட், இடியப்ப மா, அப்பளம், வினாகிரி, கிரீம் கிரேக்கர் பிஸ்கட், சோயா மீட், 400 கிராம் பால்மா, தேயிலை தூள் பக்கட், டின் மீன், 2 கிலோகிராம் வெள்ளை அரிசி மற்றும் 500 கிராம் பருப்பு ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT