Friday, May 10, 2024
Home » கோப் குழு உறுப்புரிமையிலிருந்து அனுரகுமார,துமிந்த இராஜினாமா

கோப் குழு உறுப்புரிமையிலிருந்து அனுரகுமார,துமிந்த இராஜினாமா

- குழுவின் 30 பேரில் இருந்து இதுவரை 10 பேர் விலகல்

by Prashahini
March 20, 2024 2:56 pm 0 comment

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார்.

வசந்த யாப்பா பண்டார மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் இன்று உறுப்புரிமையிலிருந்து இராஜினாமா செய்த நிலையில், புதிய தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோப் குழுவின் 30 பேரில் இருந்து இதுவரை 10 பேர் விலகியுள்ளனர்.

அதேநேரம் முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் பாராளுமன்றத்திற்கு தெரிவான காமினி வலேபொட, பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் , ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, ஹேஷா விதானகே மற்றும் எஸ். எம்.மரிக்கார், பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் கோப் குழுவில் இருந்து விலகினர்.

கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமைக்கப்பட்டமையை அடுத்து இவ்வாறு அதன் உறுப்பினர்கள் பதவி விலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT