Monday, May 20, 2024
Home » செயன்முறைக் கருத்தரிப்பு என்பது குழந்தைக்காக ஏங்குபவர்களுக்கான வரப்பிரசாதம் – டொக்டர் கீதா ஹரிப்ரியா

செயன்முறைக் கருத்தரிப்பு என்பது குழந்தைக்காக ஏங்குபவர்களுக்கான வரப்பிரசாதம் – டொக்டர் கீதா ஹரிப்ரியா

by Gayan Abeykoon
May 10, 2024 9:33 am 0 comment

“குழந்தையின்மை என்பது ஒரு குறைபாடு மட்டுமே என்பது எனது நம்பிக்கை. குறைபாட்டுக்கான காரணத்தை மிகச் சரியாகத் தெரிந்துகொண்டு, அதற்குப் பொருத்தமான சிகிச்சையை மிகச் சரியாக செய்துகொண்டாலே போதும், உங்கள் கனவு நிறைவேற! ஆனால், அதற்கு, அனுபவமும் அதி நவீன சிகிச்சையும் சிகிச்சைக்குப் பின்னான கவனிப்பும் மிக முக்கியம். அந்த வகையில்தான் எனது தலைமையிலான பிரசாந்த் செயன்முறைக் கருத்தரிப்பு மையம் முதனிலை வகிக்கிறது என்பது என் நம்பிக்கை.

வெள்ளவத்தை ரோயல் மருத்துவமனையின் ஏற்பாட்டில், இம்மாதம் 18ஆம் திகதி மட்டக்களப்பு, கோல்டன் ரிவர் மண்டபத்திலும் மறுதினம் 19ஆம் திகதி கண்டி, சிங்கள வர்த்தக முன்னணி மண்டபத்திலும் (சம்பத் மண்டபம்) குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, குழந்தைக்காக எதிர்பார்த்திருக்கும் தம்பதியருக்கு தனது அனுபவம் வாய்ந்த ஆலோசனைகளை வழங்கவிருக்கும், தமிழகத்தின் முன்னணி மருத்துவமனையான, பிரசாந்த் செயன்முறைக் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையத்தின் தலைமை மருத்துவரும், உலகப் புகழ்பெற்ற ஐ.வி.எஃப். நிபுணருமான கீதா ஹரிப்ரியா ‘தினகரன்’ பத்திரிகைக்காக கூறிய தகவலே இது.

“இன்றைய அவசர உலகில், திருமணம் செய்துகொள்ளும் பத்து தம்பதியரில் ஏழு முதல் எட்டு தம்பதியர் வரை கருத்தரிப்பில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை.

இதை, உங்கள் அக்கம் பக்கத்திலோ, உறவினர் குடும்பங்களிலோ அல்லது உங்கள் குடும்பத்திலேயோ கூடக் காண முடியும்.

“ஏன் இதை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், நீங்களும் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டிருந்தால், ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று நீங்கள் மனம் குளப்பமடையக் கூடாது என்பதற்காகத்தான்.

நீங்கள் சந்திக்கக்கூடிய பத்து தம்பதியரில், உங்களைப் போலவே ஏங்கும் மேலும் ஏழு தம்பதியர்கள் இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

“ஏன் இப்படி என்று கேட்பீர்களானால், அதற்கு இன்றைய வாழ்க்கை முறையே காரணம் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியும்.

“இன்றைய தொழில், உணவு, உடை, பழக்க வழக்கம், நித்திரை, ஓய்வு, மன அமைதி என்று எதை எடுத்துக்கொண்டாலும் ஒரு பரபரப்பும் பதற்றமும் நிறைந்த சூழலே காணப்படுகிறது.

நாகரீகம் என்ற பெயரில் நாம் வாழும் வாழ்க்கை முறையே குழந்தையின்மைக்கான முதற்காரணியாகிவிட்டது.

“என்றாலும், கால மாற்றத்துக்கேற்ப, இந்தப் பிரச்சினைக்கான தீர்வையும் காலம் உங்களுக்கு வழங்கியிருக்கிறது. அதுதான் செயன்முறைக் கருத்தரிப்பு தொழில்நுட்பமாகும்.

“செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சை என்பது குழந்தையின்மையால் வாடுவோருக்கு வரப்பிரசாதமாகக் கிடைக்கப்பெற்றிருக்கும் ஒரு வாய்ப்பு. என்றாலும் இந்த வாய்ப்பை யார் பயன்படுத்த முன்வருகிறார்களோ, அவர்கள் தத்தமது கனவுகளை விரைவிலேயே நிறைவேற்றிக் கொள்கிறார்கள். தயங்கிப் பின்தங்குபவர்களுக்கு குழந்தை என்பது நிரந்தரக் கனவாகவே ஆகிவிடுகிறது.

“செயன்முறைக் கருத்தரிப்பு முறையிலான வெற்றி வாய்ப்பு உயர் தரமான சிகிச்சைகளில் மட்டுமன்றி, நோயறியும் தொழில்நுட்பம், அனுபவமும் நிபுணத்துவமும் வாய்ந்த மருத்துவர்களின் பங்கேற்பு என்பவற்றிலும் தங்கியிருக்கிறது.

“மகப்பேறின்மை பரிசோதனைகள், சிகிச்சைகள் ஆகியவற்றில் அதிநவீன கருவிகளை தமிழகத்தில் – சில சமயங்களில் இந்தியாவிலும் கூட – முதன்முறையாக அறிமுகப்படுத்தி வருவதை எமது மருத்துவமனை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

இதனால்தான் எமது மருத்துவமனையில் 85 சதவீத வெற்றிவாய்ப்பை அளிக்க முடிகிறது.

“மகப்பேறின்மைக்கு பெண்கள் மட்டுமே காரணம் என்ற எண்ணம் இப்போது மாறிவிட்டது.

மகப்பேறின்மைக்கு 60 சதவீதம் ஆண்களே காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் இதை நினைத்து அவர்கள் வருந்தத் தேவையில்லை.

“ஏறக்குறைய, குழந்தையின்மைக்கான அனைத்துக் குறைபாடுகளுக்கும் அதி நவீன மருத்துவத் தொழில்நுட்பம் கைகொடுக்கத் தொடங்கிவிட்டது என்றே சொல்லவேண்டும்.

“நீங்களும் என்னைச் சந்தித்து உங்கள் கனவை நிறைவேற்றிக்கொள்ள விரும்பினால், 0760155882 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு, முகாம் பற்றிய விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மனம் வைத்தால் எதுவும் சாத்தியமே! முயற்சித்தால் உங்களுக்கும் குழந்தை நிச்சயம் உண்டு.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT