Monday, May 20, 2024
Home » தென்எருவில்பற்று பிரதேசத்தில் பாரம்பரிய சித்த வைத்திய முகாம்

தென்எருவில்பற்று பிரதேசத்தில் பாரம்பரிய சித்த வைத்திய முகாம்

by mahesh
March 20, 2024 3:06 pm 0 comment

மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்தின் எண்ணக்கரு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளின் வரிசையில் நான்காவது நிகழ்வாக மகளிருக்கான ‘பாரம்பரிய மூலிகை சித்த வைத்திய முகாம்’ பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சோதிடரும், பாரம்பரிய சித்த வைத்தியருமான கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம் கலந்து கொண்டு பாரம்பரிய மூலிகை மற்றும் சித்த வைத்தியம் தொடர்பான அறிவூட்டலையும், சித்த வைத்திய ஆலோசனையையும் வழங்கியிருந்தார்.

இரு கட்டங்களாக இடம்பெற்ற இந்த வைத்திய முகாமில் காலையில் இடம்பெற்ற நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்களும், பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் சமுர்த்தி சமுதாய அடிப்படை சங்கங்களின் உறுப்பினர்களுமாக நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் கலந்து கொண்டிருந்ததுடன், இந்த வைத்திய முகாம் மூலம் தாம் நல்ல ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டதாக பயனாளிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

செல்லையா -பேரின்பராசா 
(துறைநீலாவணை நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT