Monday, May 20, 2024
Home » முஜிபுர் ரஹ்மானை எவ்வாறு எம்.பியாக நியமிக்க முடியும்?
மாநகர சபை முதல்வர் வேட்பாளரான

முஜிபுர் ரஹ்மானை எவ்வாறு எம்.பியாக நியமிக்க முடியும்?

by Gayan Abeykoon
May 10, 2024 8:11 am 0 comment

டயனா  கமகேயின் பாராளுமன்ற பதவி வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள்  சக்தியின் முன்னாள் எம்.பி. முஜிபுர் ரஹ்மானை  நியமிக்க முடியாது என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபையின் முதல்வர்  வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக எவ்வாறு பதவிப்பிரமாணம் செய்ய முடியுமெனவும்   இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர சபையில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் இராஜாங்க அமைச்சரான டயனா  கமகேயின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உயர் நீதிமன்றம்  இரத்து செய்துள்ளது. இந்த வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள்  சக்தியின் முன்னாள் எம்.பி. முஜிபுர் ரஹ்மானை நியமிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது .

அவர் கொழும்பு மாநகரசபையின் முதல்வர்  வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.அதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும்  இராஜினாமா செய்தார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலும் முஜிபுர் ரஹ்மான் வேட்புமனு தாக்கல் செய்த ஒரு வேட்பாளர்.

.வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரச சேவையாளர்கள் வேட்புமனுக்களை இரத்து செய்து தமது பிரதேசத்தின் சேவைகளை முன்னெடுக்க வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தினார்கள்.

ஆனால் தேர்தல் ஆணைக்குழு இடமளிக்கவில்லை .சுய விருப்பத்துக்கு அமைய வேட்பு மனுக்களை இரத்து செய்ய முடியாதென  ஆணைக்குழு தெரிவித்தது.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT