Wednesday, May 8, 2024
Home » ஏழு ஒஸ்கார்களை அள்ளிய ‘ஓபன்ஹைமர்’ திரைப்படம்

ஏழு ஒஸ்கார்களை அள்ளிய ‘ஓபன்ஹைமர்’ திரைப்படம்

by manjula
March 12, 2024 8:12 am 0 comment

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2024ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருது விழாவில் ‘ஓபன்ஹைமர்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் ஏழு பிரிவுகளில் ஒஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சிலியன் மர்பி), சிறந்த துணை நடிகர் (ரொபர்ட் டவுனி ஜூனியர்), சிறந்த ஒளிப்பதிவாளர் (ஹாய்ட் வான் ஹோய்டெமா), சிறந்த திரைப்பட எடிட்டிங் (ஜெனிபர் லெம்), சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகியவற்றுக்கு ஓபன்ஹெய்மர் பரிந்துரைக்கப்பட்டு விருதும் வென்றுள்ளது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இந்தப் படம் இந்த ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுகளில் மொத்தம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. ஓபன்ஹைமர் படம் ஏழு பிரிவுகளிலும், மற்ற படங்கள் ஆறு பிரிவுகளிலும் விருதுகளை வென்றன.

இதற்கு முன்னர் ஒஸ்கார் விருதுகளில் கிறிஸ்டோபர் நோலன் 8 முறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், இப்போதுதான் முதல் முறையாக சிறந்த இயக்குனருக்கான விருதையும், சிறந்த படத்திற்கான விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், சிறந்த நடிகைக்கான தனது இரண்டாவது ஒஸ்கார் விருதைப் எம்மா ஸ்டோன் ‘புவர் திங்ஸ்’ திரைப்படத்தின் மூலம் வென்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT