Friday, May 10, 2024
Home » பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவு
பாரிய சர்ச்சைகளின் பின்னர்

பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவு

by Gayan Abeykoon
February 15, 2024 1:00 am 0 comment

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் கடந்த பெப்ரவரி 08 ஆம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

இதனால் புதிய அரசு அமைப்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில்,  நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி   அமைக்க முடிவு செய்தன.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி பிரதமர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும், அவருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று பிலாவல் பூட்டோவின் கட்சி அறிவித்தது. இதையடுத்து, நவாஸ் ஷெரீஃப் தனது சகோதரரும் பாக். முன்னாள் பிரதமருமான  ஷெபாஸ் ஷெரீஃபை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார்.   இதனால் பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவு பெற்று ஷெபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT