Saturday, April 27, 2024
Home » கிராம சேவையாளராக 37 வருடங்கள் பணியாற்றிய ஜினூஸ் ஓய்வு பெற்றார்

கிராம சேவையாளராக 37 வருடங்கள் பணியாற்றிய ஜினூஸ் ஓய்வு பெற்றார்

by Gayan Abeykoon
January 24, 2024 7:59 am 0 comment

யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த சுல்தான்_- காமிலா தம்பதியரின் மகனாக 27. 12. -1963 இல் ஜினூஸ் பிறந்தார். ஜினூஸ் தனது கல்வியை யாழ் மஸ்ற உத்தீன் பாடசாலையிலும், யாழ் ஒஸ்மானியா கல்லுரியிலும், யாழ் மத்திய கல்லூரியிலும் கற்றார்.  

இவரின் தந்தை சுல்தான் யாழ் சின்னப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையில் 1990 வரை  தலைவராகவும் யாழ் மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ளார். ஜினூஸ் கிராம சேவையாளர் நியமனத்தை 01.-01.-1987 இல் பெற்றார். 1990 இல் இடம்பெயர்ந்ததையடுத்து ஜினூஸ் நீர்கொழும்பில் குடியேறி 1991 ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து கிராம சேவையாளராகப் பணியாற்றினார்.

ஜினூஸ் 2010 இல் வெளிநாட்டுப் பயிற்சிக்காக இருவார காலம் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு கம்பஹா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டார்.

அவர் யாழ். சின்னப்பள்ளிவாசல் புனரமைப்புக் குழுவை உருவாக்கி, அதனூடாக பள்ளிவாசலை புனரமைத்ததுடன் இன்று வரை சின்னப்பள்ளி வாசல் நம்பிக்கையாளராக செயற்படுகிறார்.

ஜினூஸ் திறம்பட கிராம சேவையாளர் பதவியில் 37 வருடங்கள் பணியாற்றி 27.-12.-2023 இல் ஓய்வு பெற்றார். அவரது கிராம சேவையாளர் பணியை மக்கள் நன்றியுடன் பாராட்டுகின்றனர்.

கலாபூஷணம் பரீட் இக்பால்…

யாழ்ப்பாணம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT