Friday, May 10, 2024
Home » ICC டெஸ்ட் அணியில் கருணாரத்னவுக்கு இடம்

ICC டெஸ்ட் அணியில் கருணாரத்னவுக்கு இடம்

by Gayan Abeykoon
January 24, 2024 8:04 am 0 comment

சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸிலின் ஆடவர் டெஸ்ட் அணியில் இலங்கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன இடம்பெற்றிருப்பதோடு ஆண்டின் மகளிர் டி20 அணித் தலைவியாக சமரி அத்தபத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2023 இன் ஐ.சி.சி. விருதுகளை ஒட்டி ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் அனைத்து வகை கிரிக்கெட்டையும் உள்ளடக்கிய ஆண்டின் சிறந்த ஐந்து அணிகளின் விபரத்தை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

இதில் கடந்த ஆண்டு ஆறு டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 608 ஓட்டங்களுடன் 60.8 ஓட்ட சராசரியை பெற்ற திமத் கருணாரத்ன டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த டெஸ்ட் அணிக்கு அவுஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ் தலைவராக நிமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் அவர் நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று அரைச்சதங்களை பெற்றதோடு அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட்களிலும் இரண்டு சதங்களை பெற்றிருந்தார்.

மறுபுறம் மகளிர் டி20 அணிக்கு தலைவியாக நியமிக்கப்பட்டிருக்கும் சமரி அத்தப்பத்து கடந்த ஆண்டு இலங்கை அணி பல வெற்றிகளை பெற்றதற்கு அணித் தலைவியாக முன்னின்று செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் ஐ.சி.சி வெளியிட்டிருக்கும் ஆண்டின் சிறந்த ஆடவர் டி20, ஒருநாள் மற்றும் மகளிர் ஒருநாள் அணிகளில் இலங்கையின் எந்த வீரரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT