Monday, May 20, 2024
Home » தலவாக்கலை டிருப் தோட்ட மக்களுக்ெகன ரோட்டறி கழகங்கள் வழங்கிய பெரும் உதவி

தலவாக்கலை டிருப் தோட்ட மக்களுக்ெகன ரோட்டறி கழகங்கள் வழங்கிய பெரும் உதவி

by Gayan Abeykoon
January 24, 2024 8:16 am 0 comment

லவாக்கலை டிருப் தோட்டத்தில் ரோட்டறி கழகத்தின் அனுசரணையுடன் 109 மலசல கூடங்கள் மற்றும் 4 குளியலறைகள் அமைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. 

நீர்கொழும்பு ரோட்டறி கழகம், சர்வதேச ரோட்டறி கழகமான அவுஸ்திரேலியா ஜெட்வுட் ரோஸ்வெலி மற்றும் டிக்கோயா ரோட்டறி கழகம் ஆகியன இணைந்து மலசல கூடங்களையும் குளியலறைகளையும் அமைத்துள்ளன. அவற்றை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு 19.01.2024 அன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அவுஸ்திரேலியா ரோட்டறி கழக உறுப்பினர் பீட்டர், முன்னாள் மாவட்ட ஆளுநர் அஜித், நீர்கொழும்பு ரோட்டறி கழக உறுப்பினர்கள், டிக்கோயா ரோட்டறி கழக உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கென செலவு செய்யப்பட்டுள்ள மொத்தத் தொகையானது இரண்டு கோடி ரூபாவாகும்.

இதற்கான நிதியை நீர்கொழும்பு ரோட்டறி கழகம், சர்வதேச ரோட்டறி கழகமான அவுஸ்திரேலியா ஜெட்வுட் ரோஸ்வெலி மற்றும் டிக்கோயா ரோட்டறி கழகம், கெட்ஜே நிதியம் ஆகியன வழங்கியிருந்தன.

இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பெருந்தோட்டப் பகுதிகளில் சேவையாற்றுகின்ற குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான 5 நாள் வதிவிடப் பயிற்சி நெறியும் ஹட்டனில் நடைபெற்றது.இதன்படி முதல் 5 நாட்களுக்கு சிங்கள மொழிமூலமாகவும், அடுத்த 5 நாட்கள் தமிழ் மொழிமூலமாகவும் பயிற்சிகள் நடைபெற்றன.

எஸ். தியாகு…

(நுவரெலியா தினகரன் நிருபர்)

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT