Thursday, May 9, 2024
Home » பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்ற உத்தரவு

பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்ற உத்தரவு

- எம்.பிக்களும் பொதுமக்களும் பாதிக்கப்படக் கூடாது

by Rizwan Segu Mohideen
January 24, 2024 9:16 am 0 comment

பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து மற்றும் பாராளுமன்றத்திற்கு செல்வதை தடுக்கும் வகையில் பிரதான வீதியை மறித்து இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

எந்தவொரு வீதியையும் மறித்து, பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடாமல், பொதுமக்கள் பிரதிநிதிகளின் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் வகையிலும், அரச ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் மற்றும் எந்தவொரு நபருக்கும் இடையூறு ஏற்படாத வகையிலும் குறித்த போராட்டத்தை நடத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இன்று (24) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த போராட்டம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.

சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவினரால் பொல்துவ சுற்றுவட்டத்திலிருந்து பாராளுமன்ற வீதியை மறித்து, பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து மற்றும் பாராளுமன்றத்திற்கு செல்வதை தடுக்கும் வகையில் பிரதான வீதியை மறித்து போராட்டம் நடத்தவுள்ளதாக வெலிக்கடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த உத்தரவை ஏற்க முடியாவிட்டால், பிரதிவாதிகள் உடனடியாக குறித்த போராட்டத்தை கலைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

குறித்த உத்தரவை மீறினால், அமைதியை நிலைநாட்டும் வகையில் பொலிஸாரால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT