Monday, May 20, 2024
Home » சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்த ‘பாதுகாப்பான பாடசாலை செயற்றிட்டம்’ ஆரம்பம்

சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்த ‘பாதுகாப்பான பாடசாலை செயற்றிட்டம்’ ஆரம்பம்

by Gayan Abeykoon
January 24, 2024 9:45 am 0 comment

சிறுவர் வன்முறையை நிறுத்துவதற்கான அறக்கட்டளை (Stop Child Cruelty Trust – SCC) மற்றும் சிறுவர் பாதுகாப்பு கூட்டணி (Child Protection Alliance -CPA) ஆகியன இணைந்து சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதில் நிலைபேண்தகு மற்றும் முற்போக்கான மாற்றங்களை நோக்கிய அயராத முயற்சிகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றன.

கல்வி அதிகாரிகள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (National Child Protection Authority -NCPA) மற்றும் யுனிசெஃப் (UNICEF) ஆகிய ஸ்தாபனங்களின் அங்கீகாரத்துடன் ‘மகிழ்ச்சி நிறைந்த பாதுகாப்பான கல்வி – பாதுகாப்பான பாடசாலை செயற்றிட்டம்’ (Happier and Safer Education – Secure Schools Program) என்ற தேசிய செயற்பாட்டு திட்டத்தை  ஆரம்பித்துள்ளன.

இரு வருடங்களுக்கு முன்னர் CPA ஐ ஸ்தாபிப்பதில் முன்னின்று உழைத்துள்ள SCC, பாடசாலைகளில் உடல்ரீதியான தண்டனைகளை முடிவுக்கு கொண்டு வருவதை ஊக்குவிக்கும் வகையில், 2022 பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட #NOguti என்ற பிரச்சாரம் அடங்கலாக பல்வேறு புதுமையான சாதனைகளை நிலைநாட்டியுள்ளது.

இலங்கையில் சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கத்தை மேம்படுத்தி, உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் வகையில் தென் மாகாணத்தில் 39 பாடசாலைகளுக்காக ‘பாதுகாப்பான பாடசாலை செயற்றிட்டம்’ என்ற நிகழ்ச்சித்திட்டத்தை நவம்பர் 20 ஆம் திகதியன்று அது முன்னெடுத்துள்ளது.

தென் மாகாணத்தில் கலங்கரை விளக்க பாடசாலையாக, ஹிக்கடுவை, ஸ்ரீ சுமங்கல கல்லூரியில் ஒன்றரை ஆண்டுகள் கொண்ட, முழுமையான நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பிலுள்ள இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில்   நடாத்தப்பட்ட ‘சிறுவர் துஷ்பிரயோகம் – தேசத்தின் சொல்லொணா சுமை’ (Child Abuse – Nation’s Unbearable Burden) என்ற தலைப்பிலான ஊடக மாநாட்டில் SCC இன் ஸ்தாபக தலைவரும், CPA இன் இணை அமைப்பாளருமான வைத்தியர் துஷ் விக்கிரமநாயக்க அவர்கள் இப்பயணம் தொடர்பில் மிகுந்த உற்சாகத்துடன் கருத்து வெளியிட்டார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT