Saturday, April 27, 2024
Home » அறுவடைக்காலம் நெருங்கிய வயல்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிப்பு
தங்காலை 'கிரம ஓயாவின்' வான்கதவுகள் திறப்பு;

அறுவடைக்காலம் நெருங்கிய வயல்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிப்பு

பாரிய நெருக்கடியால் விவசாயிகள் விரக்தியில்

by mahesh
November 1, 2023 9:10 am 0 comment

தங்காலை பிரதேசத்தில் ஒரு மாதகாலமாக தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழையின் காரணமாக ‘கிரம ஓயாவின்’ வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாக அறுவடைக்கு அண்மித்திருந்த வயல்கள் முற்றாக நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதனால் பாரிய நெருக்கடிகளுக்கு தாம் முகம் கொடுத்துள்ளதாக தங்காலை நலகம பிரதேச விவசாயிகள் (31) தெரிவித்தனர்.

கிரமஓயா திட்டத்தின் கீழ் 250 ஏக்கர் வயல்கள் நலகம பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்ததோடு இவை நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதனால் 150 ஏக்கர் வயல்கள் அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளதனால் 150 இற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

வரட்சிக் காலங்களிலும் பல்வேறு சிரமங்மங்களுக்கு மத்தியில் விவசாயத்தினை மேற்கொண்டு வயல்களினை பாதுகாத்து வந்ததாகவும் திடீரென பெய்த தொடர் அடை மழையின் காரணமாக தற்பொழுது அறுவடை செய்வதற்கு தயாராக இருந்தநிலையில் வயல்கள் நீரினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT