Friday, May 10, 2024
Home » பாராளுமன்றத் தேர்தல் முறையை மாற்ற அரசியலமைப்பில் திருத்தம்

பாராளுமன்றத் தேர்தல் முறையை மாற்ற அரசியலமைப்பில் திருத்தம்

விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு

by damith
October 9, 2023 6:00 am 0 comment

பாராளுமன்றத் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கான அரசிலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ள விசேட அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசின் சார்பில் நீதி மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக் ஷ இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். உத்தேச அரசிலமைப்பு திருத்தத்தின்படி, 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 160 பேர் தொகுதி ரீதியாக மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். எஞ்சிய 65 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அல்லது மாகாண மட்டத்தில் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அரசிலமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கு அரசு எதிர்பார்த்துள்ளதுடன், அமைச்சரவையின் அனுமதியை வழங்குமாறு நீதி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். தற்போதைய அரசமைப்பின்படி, 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் விகிதாசார அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சியுள்ள 29 பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சிகள் பெற்ற வாக்குகளின் வீதத்துக்கு ஏற்ப அந்தந்த கட்சிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT