Thursday, May 9, 2024
Home » பொலிஸ் மாஅதிபரை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

பொலிஸ் மாஅதிபரை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

by Rukshy Vinotha
July 7, 2023 3:06 pm 0 comment

பொலிஸ் மாஅதிபரை நியமிக்கும் போது மதம் அல்லது வேறு எந்த அமைப்பினதும் அழுத்தங்களுக்கு அடிபணிய அரசாங்கம் தயாராக இல்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஸ்திரமான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் உரிய நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “ஒரு நாடாக, நாட்டின் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு ஆண்டும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான மதிப்பீட்டு அறிக்கையைப் பெறுகிறோம்.

இந்த மதிப்பீடு பயங்கரவாதம், தீவிரவாதம், சட்டவிரோத நடவடிக்கைகள், புவிசார் அரசியல் மற்றும் குற்றத் தடுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக காணப்படும்.

இந்த மதிப்பீட்டின்படி, தேசிய பாதுகாப்பு தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT