Home » க.பொ.த. (உ/த) பரீட்சை 2023 விண்ணப்பம் கோரல்

க.பொ.த. (உ/த) பரீட்சை 2023 விண்ணப்பம் கோரல்

- பரீட்சை பெறுபேறுகளை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு வேறொரு சந்தர்ப்பம் வழங்கப்படும்

by Prashahini
July 7, 2023 3:18 pm 0 comment

2023ம் ஆண்டில் நடைபெறுவுள்ள க.பொ.த(உ/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளிடமிருந்து பரீட்சைத் திணைக்களம் விணணப்பங்களை கோரியுள்ளது.

இப்பரீட்சைக்காக விண்ணப்பதாரிகள் நிகழ்நிலை (Online) முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், நிகழ்நிலை பரீட்சை இணையத்தளம் மற்றும் பரீட்சைத் திணைக்களத்தின் கையடக்கத் தொலைபேசி செயலிக்குள் நுழைவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்க முடியும் எனவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இப்பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சாத்தியாக தோற்றவுள்ளவர்களின் விண்ணப்பங்கள் இம்மாதம் 28ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இருந்தாலும் 2022 (2023) க.பொ.த. (உ/த) பரீட்சைக்குத் தோற்றி இம்முறை 2023இல் நடைபெறவுள்ள பரீட்சைக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது தடவையாக தோற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள விண்ணப்பதாரிகளுக்கு அவர்களின் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னர் விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமீத் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

(ஏறாவூர் சுழற்சி நிருபர்)

இன்றைய தினகரன் பத்திரிகையில் வெளிவந்த இது தொடர்பான மேலதிக விபரம்…

பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தை பார்வையிட…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT