சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பில் 1 1 6 அழைக்கவும் | தினகரன்

சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பில் 1 1 6 அழைக்கவும்

சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பில் 1 1 6 அழைக்கவும்-Suspicious Van Lorry-Call 116

வெடிபொருள் அடங்கிய, சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் சிறிய ரக வேன் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு பிரிவுக்கான பிரதி பொலிஸ் மா அதிபரினால், கொழும்பு பிரிவுக்கான அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கொழும்பிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன், சந்தேகத்திற்கிடமான வாகனங்கள், நபர்கள், சம்பவங்கள் தொடர்பிலான தகவல்களை 1 1 6 எனும் அவசர தொலைபேசி இலக்கம் மூலம் அறிவிக்கலாம் என, விமானப்படை அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...