இந்தோனேஷியாவில் 6.9 ரிச்டர்; இலங்கைக்கு பாதிப்பில்லை | தினகரன்

இந்தோனேஷியாவில் 6.9 ரிச்டர்; இலங்கைக்கு பாதிப்பில்லை

இந்தோனேஷியாவில் 6.9 ரிச்டர்; இலங்கைக்கு பாதிப்பில்லை-Indonesia 6-9 Richter Earth Quake

 

இது வரை 03 பேர் பலி

இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு அருகில் 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் உணரப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இவ்வதிர்வு 7.0 ரிச்டர் என, அமெரிக்க பூகோளவியல் ஆய்வு மையம் அறிவித்திருந்த போதும் அது பின்னர் 6.9 ரிச்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா தளமான லொம்பெக் தீவில் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்நில நடுக்கத்தை அடுத்து, அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடுக்கம் காரணமாக இது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வாரம் குறித்த பகுதியில் மற்றொரு பூகம்பம் இடம்பெற்று அதில் 12 பேர் பலியான நிலையில் குறித்த பூகம்பம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் குறித்த நில நடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...