Sunday, April 28, 2024
Home » கொமர்ஷல் வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு iPhone 15 Pro

கொமர்ஷல் வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு iPhone 15 Pro

by sachintha
November 23, 2023 7:00 am 0 comment

கொமர்ஷல் வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், வங்கியால் அறிவிக்கப்பட்ட வருட இறுதி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் மாதாந்தம் ரூபாய் 50,000 க்கு மேல் தங்கள் கார்ட்கள் ஊடாக செலவழித்து, விரும்பத்தக்க iPhone 15 Pro உட்பட அற்புதமான பரிசுகளை வென்றெடுக்க முடியும்.
இந்த ஊக்குவிப்பு திட்டமானது 2023ஆம் ஆண்டின் இறுதி வரை நடைபெறும், மேலும் எந்தவொரு ComBank கிரெடிட் கார்டு வைத்திருப்பவரும், நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்புக்கு கார்ட் மூலம் பணம் செலுத்தினால், அவர் பரிசுகளுக்கான மாதாந்த குலுக்கல்களுக்குச் செல்ல தகுதியுடையவர் என வங்கி தெரிவித்துள்ளது.
iPhone 15 Pro வின் மகத்தான பரிசைத் தவிர, ஒவ்வொரு மாதாந்த சீட்டிலுப்பிலும் 10 வெற்றியாளர்களுக்கு கட்டண செலுத்தல்களையும், இரண்டு வெற்றியாளர்களுக்கு சொகுசு ஹோட்டல்களில் தங்குவதற்கும் அதேபோன்ற இரண்டு வெற்றியாளர்களுக்கு நட்சத்திர வகுப்பு ஹோட்டல்களில் இரவு உணவுக்கான வாய்ப்பும் வழங்கப்படும்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT