லிந்துலை பகுதியில் மினி சூறாவளி; 33 வீடுகள் சேதம் | தினகரன்

லிந்துலை பகுதியில் மினி சூறாவளி; 33 வீடுகள் சேதம்

 
லிந்துலை, மெராயா பகுதியில் நேற்று (08) மாலை ஏற்பட்ட மினி சூறாவளியால் 33 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
 
இச்சூறாவளி ஓல்ட்ரிம் தோட்டத்துக்கு சொந்தமான கௌலினா பிரிவும் மற்றும் என்போல்ட் தோட்டப்பகுதியிலும் இச்சூறாவளி ஏற்பட்டுள்ளது.
 
 
இதில் கௌலினா தோட்டத்தில் 25 வீடுகளும், என்போல்ட் பகுதியில் 8 வீடுகளும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் சேதமடைந்துள்ளன.
 
பாதிப்படைந்த வீடுகளில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வீடும் அடங்குவதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
மின்கம்பங்கள் மற்றும் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இப்பிரதேசத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.
 
பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150ற்கும் மேற்பட்டோர்களுக்கு நிவாரணங்களை வழங்க பிரதேச செயலகம், தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 
 
பாதிக்கப்பட்டோருக்கு பொதுமக்களும் உதவிகளை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)
 
 

Add new comment

Or log in with...