ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு: அதிஷ்டவசமாக உயிர் தப்பினார் | தினகரன்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு: அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்

 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷபூர் ஷத்ரான் சென்ற வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஷபூர் உயிர்தப்பினார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஷத்ரான். 29 வயதாகும் இவர் அந்த அணிக்காக 39 ஒருநாள் மற்றும் 27 ரி 20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடைசியாக அயர்லாந்து அணிக்கெதிராக கடந்த ஆண்டு ஜூலை 12-ம் திகதி சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளார். தற்போதும் அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.

இவர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு காபூலில் உள்ள பக்ராமி பகுதி அருகே தனது சகோதரருடன் வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சில மர்ம நபர்கள் அவர் சென்ற கார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் பல குண்டுகள் அவரது காரை தாக்கினார்.

ஆனால் ஷபூர் அதிஷ்டவசமாக இச்சம்பவத்தில் இருந்து காயமின்றி உயிர்தப்பினார். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...