Thursday, May 23, 2024
Home » தாய்வானில் நில நடுக்கம்; உயிர்ச் சேதம் கிடையாது

தாய்வானில் நில நடுக்கம்; உயிர்ச் சேதம் கிடையாது

by Gayan Abeykoon
April 24, 2024 7:21 am 0 comment

தாய்வானின் கிழக்கு பகுதியான ஹுவாலியன் பகுதியில் (Hualien) 6.3 ரிச்டர் அளவுகோலில் பல நிலநடுக்கங்கள் பதிவாகியதாக, தாய்வானின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை (21) இரவு நிலநடுக்கங்கள் ஏற்பட ஆரம்பித்து, நேற்று அதிகாலை வரை நீடித்ததாகவும் 80 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவானதாகவும், அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாய்வானின் தலைநகர் தாய்பேயில் இந்த நிலநடுக்கங்களால் சில கட்டடங்கள் குலுங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்வானில் கடந்த 03ஆம் திகதியும் 7.2 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததுடன், இதில் 14 பேர் உயிரிழந்திருந்தனர்.

6.3 ரிச்டர் அளவுகோலில் பதிவு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT