Sunday, May 19, 2024
Home » மூன்றாவது முறையாகவும் லண்டன் மேயரான சாதிக்கான்

மூன்றாவது முறையாகவும் லண்டன் மேயரான சாதிக்கான்

by damith
May 6, 2024 6:30 am 0 comment

லண்டன் நகராதிபதியாக தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் சாதிக்கான் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஹாலின் 33 வீத வாக்குகளைப் பெற்ற நிலையில், சாதிக்கான் 44 வீத வாக்குகள் பெற்று வெற்றியீட்டி னார்.கருத்துக்கணிப்புகள் ஹால் வெற்றி பெறக்கூடும் என்றே வெளியாகியிருந்தன. இருந்தபோதும், பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் சாதிக்கானின் திடமான செயற்றிறன்கள் அவரது வெற்றியை உறுதிப்படுத்தியது.

பாகிஸ்தானிலிருந்து குடியேறிய பெற்றோருக்குப் பிறந்த இவர், கவுன்சிலுக்கு சொந்தமான குடியிருப்பில் வளர்ந்தார். சாதிக்கானின் தந்தை பஸ் சாரதியாக பணிபுரிந்தவர். வடக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த பிறகு, சாதிக்கான் மனித உரிமைகள் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞராக தொழிலைத் தொடங்கினார். சாதிகானின் அரசியல் வாழ்க்கை 1994 இல் தொடங்கியது, லண்டன் பெருநகரமான டூட்டிங்கில், தொழிலாளர் கட்சி கவுன்சிலராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றிலிருந்து அயராது உழைத்து உயர்ந்து, இறுதியில் 2016 இல், லண்டனின் முதல் முஸ்லிம் மேயராக சாதிக்கான் வரலாறு படைத்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT