Monday, May 6, 2024
Home » ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் அத்தபத்து

ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் அத்தபத்து

by Gayan Abeykoon
April 24, 2024 7:28 am 0 comment

தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆட்டமிழக்காது 195 ஓட்டங்களை விளாசிய இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தபத்து சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

அத்தபத்துவின் அபார ஆட்டத்தின் மூலம் மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகூடிய ஓட்டங்களை துரத்தி சாதனை படைத்த இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் 1–1 என சமன் செய்தது.

இதன்மூலம் அத்தபத்து இங்கிலாந்து சகலதுறை வீராங்கனை நடாலி சிவர் புருன்டை பின்தள்ளி முதல் இடத்தை பிடித்தார். முன்னதாக அவர் 2023 ஜூலை 3 தொடக்கம் 12 ஆம் திகதி வரை தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருந்தபோதும் பெத் மூனி, தொடர்ந்து சிவர் புருன்ட் அவரை பின்தள்ளி இருந்தனர்.

இதன்போது அத்தபத்து தனது அதிகபட்ச தரநிலை புள்ளியாக 773 புள்ளிகளையும் பெற்றார். இதில் அவர் ஒருநாள் சகலதுறை வீராங்கனைகள் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேற்றம் கண்டு ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார்.

சமரி அத்தபத்து ஆட்டமிழக்காது பெற்ற 195 ஓட்டங்களும் மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களாக இருந்ததோடு ஆடவர் மற்றும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் பதிலெடுத்தாடி வெற்றி பெற்ற அணிகளில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களாக இருந்தன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT