Tuesday, April 30, 2024
Home » பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேசிய நல்லிணக்க பொறிமுறையே சாத்தியம்

பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேசிய நல்லிணக்க பொறிமுறையே சாத்தியம்

அறிவியல் நகரத்தில் பொறியியல் பீடம் உருவாக இதுவே வழிகோலியது

by mahesh
April 17, 2024 6:10 am 0 comment

சரியான திசை நோக்கி பயணிப்பதனூடாகவே எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். எதிர்காலத்திலும் எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேசிய நல்லிணக்கப் பொறிமுறையே நடைமுறைச் சாத்தியமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1990 களின் ஆரம்பத்தில் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு பாராளுமன்ற ஜனநாயகத்தை பயன்படுத்தி, தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வை காண்பதற்கான பயணத்தை முன்னெடுத்து வருகிறேன்.இதனால்,பல்வேறு நன்மைகள் எமது மக்களுக்கு கிடைத்தன.அறிவியல் நகரை விடுவித்து, பொறியியல் பீடத்தை அங்கு உருவாக்குவதற்கு தேசிய நல்லிணக்கமே காரணமாக அமைந்திருந்தது. இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு யாழ் பல்கலைக் கழகத்தின் தேசிய ஊழியர் சங்கத்தினர் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT