Home » தொழில்புரிவோர் அந்தஸ்தை உயர்த்த ஓய்வூதியம் EPF, ETF கொடுப்பனவுகள் – அமைச்சரவையில் அடுத்த வாரம் யோசனை

தொழில்புரிவோர் அந்தஸ்தை உயர்த்த ஓய்வூதியம் EPF, ETF கொடுப்பனவுகள் – அமைச்சரவையில் அடுத்த வாரம் யோசனை

by sachintha
April 30, 2024 6:21 am 0 comment

தொழில் செய்யும் சகலருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கிடைக்கும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளன.

கூலித்தொழிலாளி என்ற பெயரை இல்லாமல் செய்து, அவர்களுக்கு கௌரவமான தொழில்அந்தஸ்தை வழங்கும் நோக்கில் இந்த யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.இதுபற்றி கருத்துரைத்த அவர்:

எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையில் இவ்விடயம் குறித்த யோசனை முன்மொழியப்படும். தொழிலாளர்களின் தரத்தை உயர்த்தும் உன்னத திட்டங்களில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.இதில் கவர்ச்சியுற் றுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச மற்றும் தேசிய மட்ட தலைவர்கள் பலர், மே தினத்தின் பின்னர் எம்முடன்இணைந்து கொள்வர்.

பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பான ஐயப்பாடுகளால், ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர்,எம்மோடு இணைய தயக்கம் காட்டி வருகின்றனர்.இருந்தபோதிலும்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் பலர் இணைந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT