Home » உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள்

- 139 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணம்

by sachintha
April 30, 2024 6:40 am 0 comment

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக 11 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் மொத்தமாக நிர்மாணிக்கப்படவுள்ள 223 வீடுகளை நிர்மாணிப்பதற்காக 139 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

கம்பஹா கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகாமையில்,அதிக வீடுகள் நிர்மாணிக்கப் படவுள்ளன.கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தை அண்டிய பகுதியில் 144 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக 90.85 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது.

கொச்சிகடை தேவாலயத்தை அண்டிய பகுதியில் எட்டு குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 70 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 11 வீடுகள் நிர்மாணிப்பதற்காக ஐந்து மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT