Tuesday, April 30, 2024
Home » அதிக விலை நிர்ணயம் தொடர்பான கபீர் ஹாஸிம் எம்.பியின் அறிக்கை தொடர்பில் கேள்வி எழுப்பும் ஆர்வலர்கள்

அதிக விலை நிர்ணயம் தொடர்பான கபீர் ஹாஸிம் எம்.பியின் அறிக்கை தொடர்பில் கேள்வி எழுப்பும் ஆர்வலர்கள்

- பாராளுமன்றக் கருத்தினால் வெளிப்படைத்தன்மை, ஏல கொள்வனவில் பாதுகாப்பற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
April 11, 2024 1:59 pm 0 comment

நிலைபேறான வலுசக்தி மற்றும் சமூக நலனை ஊக்குவிக்கும் ஒரு கூட்டமைப்பான, இலங்கை நீல பச்சைக் கூட்டணியானது (Sri Lanka Blue Green Alliance), இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கான முதலீடுகள் தொடர்பில் பல்வேறு விடயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியவாறு, இலங்கை தேசிய நூலக கேட்போர் கூடத்தில் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை முன்னெடுத்திருந்தது.

இலங்கை நீல பச்சைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ராஜித அபேகுணசேகர இங்கு தெரிவிக்கையில், ‘பசுமைப் பொருளாதாரம் மற்றும் பசுமை வலுசக்தியை மேம்படுத்துவதே எமது அமைப்பின் பிரதான நோக்கமாகும். ஒரு தீவு நாடாகிய நாம் எமது இயற்கை வளங்களை உச்ச பயன்பாடு மிக்கதாக பயன்படுத்துவது இன்றியமையாததாகும். இந்த விடயத்தில் மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மிகவும் முக்கியமானதாகும்.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் அண்மையில் பல விடயங்கள் பேசப்பட்டன.

தேசிய மின்கட்டமைப்பில் 50 MW வலுவை சேர்ப்பதற்கான திட்டத்திற்கான விலைமனு கோரலை இலங்கை மின்சார சபை (CEB) கோரியுள்ளதால், அதானி குழுமத்தின் 500 MW திட்டத்தை தாமதப்படுத்துமாறு கபீர் ஹாசிம் எம்.பி பாராளுமன்றத்தில் கோரியிருந்தார். இந்த விலைமனு கோரல்  மூலம் ஒரு அலகிற்கு 0.7 டொலர் விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாக தான் தெரிந்து கொண்டதாக கபீர் ஹாஷிம் தெரிவித்திருந்தார். இதன் மூலம் கபீர் ஹாஷிம் பயனடைவாரா என்பது நிச்சயமற்றதாக இருந்த போதிலும், அவரது கருத்துகள் ஆபத்து மிக்கதாக காணப்படுகின்றன. இதன் மூலம், 500 MW திட்டத்தை இழப்பதற்கான சாத்தியம் மற்றும் 50 MW திட்டத்திற்கான கொள்முதல் நடைமுறைகளில் ஏலதாரர்களின் நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஆகிய இரு விடயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அறிக்கைகள் எவ்வித விளக்குமும் அற்ற, வெறுமனே அரசியல் சூழ்ச்சியாகவே தோன்றுகின்றன. எனவே, இது ஆதாரமற்றது எனவும் நாட்டின் குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒன்று எனவும் நீல பச்சைக் கூட்டணி கருதுகிறது.

இலங்கை நீல பச்சைக் கூட்டணியானது, முற்போக்கான கொள்கைகளுக்காக வாதிடுகின்ற, அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லும் ஓர் அமைப்பு என்பதால், அதன் கூட்டுக் குரலானது நம்பிக்கையுடனும் உறுதியுடனும் எதிரொலிக்கிறது.

இது தொடர்பான வீடியோ இணைப்பு: https://we.tl/t-lgjF6lRwHz

மக்கள் நல வலுசக்தித் திட்டங்களின் இழுபறி நிலை தொடர்பில் கேள்வியெழுப்பும் Blue Green Alliance

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT