Friday, May 17, 2024
Home » பங்களாதேஷின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஷெஹ்பாஸ் ஷரீப் ஆச்சரியம் தெரிவிப்பு

பங்களாதேஷின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஷெஹ்பாஸ் ஷரீப் ஆச்சரியம் தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
April 29, 2024 9:53 pm 0 comment

பாகிஸ்தானின் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் கராச்சியில் வணிக சமூகத்துடன் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வியூகங்களை வகுப்பதில் ஈடுபட்டார். இந்த அமர்வை வணிகத் தலைவர்களின் நுண்ணறிவுக்கு செவிசாய்ப்பதற்கும், அவற்றை செயல்படக்கூடிய பொருளாதாரத் திட்டங்களாக உருவாக்குவதற்கும் ஒரு வாய்ப்பாக விவரித்த செபாஸ், பங்களாதேஷின் குறிப்பிடத்தக்க தொழில்துறை முன்னேற்றம் பற்றி விளக்கினார்.

ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பற்றி கருத்து வெளியிட்ட அவர் , “நான் மிகவும் இளமையாக இருந்தபோது, அது எங்கள் தோள்களில் ஒரு சுமை என்று கூறப்பட்டது. இன்று அந்த ‘சுமை’ (பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில்) எங்குள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். மேலும் நாங்கள் அவர்களை பார்த்து வெட்கப்படுகிறோம்.” என்று தெரிவித்தார்.

செபாஸின் உரையைத் தொடர்ந்து, நடைபெற்ற திறந்த கலந்துரையாடலின் போது , அண்மைய அரசாங்க முன்முயற்சிகளை வணிகத் தலைவர்கள் பாராட்டுயதோடு, அரசியல் ஸ்திரமின்மை குறித்த கவலைகளை வெளிப்படுத்தினர். ஆரிப் ஹபீப் குழுமத்தின் தலைவரான ஆரிஃப் ஹபீப், அரசியல் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதற்காக இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுக்கள் மற்றும் சிறையில் இருக்கும் பிடிஐ தலைவர் இம்ரான் கானுடன் சமரசம் போன்ற மேலும் பல ஈடுபாடுகள் தொடர்பில் பரிந்துரைத்தார்.

அரசியல் ஸ்திரத்தன்மை பற்றி கவலைகள் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் நேரடியாகப் பேசுவதைத் தவிர்த்தாலும், பொருளாதார வளர்ச்சிக்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் வரை நாடு முழுவதும் உள்ள தொழிலதிபர்களை சந்திப்பதாக அவர் உறுதியளித்தார்.

இதற்கு இணையாக, சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கான 1.1 பில்லியன் டொலர் நிதிப் பொதியை மறுஆய்வு செய்ய உள்ளது . ஜூலை தொடக்கத்தில் ஒரு பெரிய, நீண்ட கால கடனைப் பெற எதிர்பார்ப்பதாக பாகிஸ்தானின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜூலை தொடக்கத்தில் புதிய, பெரிய மற்றும் நீண்ட கால கடனுக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளதாக பாகிஸ்தானின் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியான பணச் சமநிலை நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நிதிச் சந்தைகளை நிலைப்படுத்த, காலதாமதமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை எளிதாக்குவதற்கு கணிசமான, நீட்டிக்கப்பட்ட கடனை எதிர்பார்த்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT