Thursday, May 16, 2024
Home » மே தினக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதில் பிரதான கட்சிகள் மும்முரம்

மே தினக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதில் பிரதான கட்சிகள் மும்முரம்

கொழும்பிலும், வெளியிலும் பல கூட்டங்கள்

by damith
April 29, 2024 6:45 am 0 comment

தொழிலாளர் தினக் கூட்டங்களை சிறப்பாக நடத்துவதற்கு பிரதான கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பிரதான கட்சிகள் சில கொழும்பிலும் வெளி மாவட்டங்களிலும் மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பில் மருதானையில் நடைபெறவுள்ளது.பொது ஜன பெரமுனவின் மே தின கூட்டம் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பொதுஜன பெரமுன கட்சி அரசாங்கம் சார்ந்ததாக இருந்தாலும், இம்முறை மே தினக் கூட்டத்தை தனியாக நடத்துகிறது. இந்த கட்சிக்கு ஆதரவான அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் மருதானையில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது .

நாடளாவிய பல பாகங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொள்வதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்க வுள்ளனர். அந்த வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிமல் லான்சா தலைமையிலான புதிய

கூட்டணியின் உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் கொழும்பு நகர சபை மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பு புறக்கோட்டையிலிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு பிற்பகலில் கொழும்பு நகர சபை மைதானத்தையடைந்து அங்கு கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் தலைமையில் கூட்டம் நடைபெற வுள்ளது.

பங்காளிக் கட்சிகள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளன. மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், ஜீ. எல். பீரிஸ் ஆகியோரின் தலைமையிலான கட்சிகளும் அணிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளன.

தேசிய மக்கள் கட்சியின் மே தினக் கூட்டம்

கட்சியின் தலைவர் அனுரகுமார திநாயக்கரின் தலைமையில் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற வுள்ளது.

மே தின பேரணி பி ஆர் சி மைதானத்திலிருந்து ஆரம்பமாகி லிப்டன் சுற்றுவட்டத்தை யடைந்ததும் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக அந்த கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்தக் கட்சி இம்முறை நாட்டின் நான்கு மாவட்டங்களில் தனித்தனி மே தின கூட்டங்களை நடத்தவுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரத்தில் கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம் பி யின் தலைமையில் கூட்டங்கள் நடைபெற வுள்ளன.

மற்றும் ஒரு கூட்டம் மாத்தறையில் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவின் தலைமையில் நடைபெற வுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன தரப்பினரின் மே தினக் கூட்டம் கம்பஹா நகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது. கிளிநொச்சியில் மாவட்ட தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் கூட்டம் நடைபெற உள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தலைமை வகிக்க வுள்ளார். மட்டக்களப்பு பெரிய கல்லாறு சித்தி விநாயகர் ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ள கூட்டம் , கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் பிற்பகல் 2.30 மணிக்கு இடம் பெறவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டகலையில் நடைபெறவுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT