Saturday, April 27, 2024
Home » தகுதியான பாடசாலைகளில் ஆறு புதிய நூலகங்கள் நிறுவிய செலான்
36வது ஆண்டு நிறைவு

தகுதியான பாடசாலைகளில் ஆறு புதிய நூலகங்கள் நிறுவிய செலான்

by Gayan Abeykoon
March 29, 2024 6:25 am 0 comment

செலான் வங்கி தனது 36வது ஆண்டு நிறைவையொட்டி தனது செலான் பகசர திட்டம் ஊடாக மற்றொரு மைல்கல்லை எட்டிக் கொண்டாடியது. மார்ச் 25, 2024 அன்று, இலங்கை முழுவதும் உதவி தேவைப்படும் பாடசாலைகளில் ஐந்து புதிய நூலகங்களை வங்கி திறந்து வைத்தது. மேலும் ஒரு மேலதிக நூலகம் மார்ச் 26 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது இளைய சமுதாயத்தை ஊக்குவிப்பதிலும் கற்றல் கலாசாரத்தை வளர்ப்பதிலும் வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.

புதிதாக திறக்கப்பட்ட நூலகங்கள் மொறட்டுவையில் மொறட்டு மகா வித்தியாலயம், சாவகச்சேரியில் உள்ள யாழ்/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, தலுவகொடுவவில் உள்ள புனித அன்னம்மாள் மகா வித்தியாலயம், காத்தான்குடியில் அமைந்துள்ள அமீன் மகா வித்தியாலயம், நாரம்மலயில் உள்ள தம்பதெனிய மத்திய கல்லூரி மற்றும் கண்டியில் உள்ள ஸ்ரீ சந்திரானந்த பௌத்த பெண்கள் பாடசாலை ஆகியவை ஆகும். இந்த விரிவாக்கத்துடன், மொத்த நூலகங்களின் எண்ணிக்கை 231 ஆக உயர்கிறது. செலான் வங்கியானது பரந்த கற்றல் சூழலை வளர்ப்பதில் அச்சிடப்பட்ட நூல்களின் மதிப்பை அங்கீகரித்து, பௌதீக நூலகங்களை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. எவ்வாறாயினும், Gen Z கற்பவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பாரம்பரிய நூலகங்களை டிஜிட்டல் மையங்களாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் செலான் வங்கி எண்ணிம நூலகங்களை (e-libraries) நோக்கிய படியை முன்னெடுத்து வருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT