Thursday, May 9, 2024
Home » வீசா இன்றி தங்கியிருப்போர் நாடு திரும்ப கால அவகாசம்

வீசா இன்றி தங்கியிருப்போர் நாடு திரும்ப கால அவகாசம்

by sachintha
March 26, 2024 8:01 am 0 comment

குவைத் அரசாங்கம் பகிரங்க அறிவிப்பு

தொழிலுக்காகச் சென்று வீசா விதி முறைகளை மீறி, குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர் நாடு திரும்புவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இக்காலத்துக்குள் வெளியேறும் சகலருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும்,அபராதம் செலுத்தாமல் நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் குவைத் அராசாங்கம் அறிவித்துள்ளது.

குவைத் அமீர் ஷேக் மெஷால் அல்-அஹமட் அல்-ஜாபா, இதனை அறிவித்துள்ளதாக குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

மார்ச் 17 முதல் ஏப்ரல் 17 வரைக்கும் இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக சுமார் 19,620 இலங்கையர்கள் இருப்பதாக , உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் சுமார் 5,000 இலங்கையர்கள் மீண்டும் இலங்கை செல்வதற்காக தூதரகத்தில் தம்மை பதிவு செய்துள்ளதாகவும் தூதுவர் தெரிவித்தார். பொதுமன்னிப்புக் காலத்திற்குப் பின்னர் இலங்கைக்கு வர முயற்சிப்போர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT