Monday, May 20, 2024
Home » நிர்மாணத்துறையினரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட அமைச்சரவை பத்திரம்

நிர்மாணத்துறையினரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட அமைச்சரவை பத்திரம்

by sachintha
March 26, 2024 8:10 am 0 comment

நிர்மாணத்துறையில் பணிபுரிபவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.இதற்கான முன்மொழி வுகள் அடங்கிய விசேட அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த அமைச்சரவைப் பத்திரத்தை தயாரிக்க அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவை நியமித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் தொற்று பரவலால்,செலுத்த முடியாத கொடுப்பனவுகளை நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சும் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும் தற்போது பூர்த்தி செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி கடந்த வருடம் 12,501 மில்லியன் ரூபா கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் தொற்று காரணமாக, இலங்கையின் நிர்மாணத் துறை கடும் பின்னடைவைச் சந்தித்ததுடன், அத்துறையில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினாளார்.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதியின் விசேட கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தார். இதையடுத்து, இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிதியமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT